வெற்றுப் பூத் தட்டையும் இடுப்பில் வைத்துக்கொண்டு...
ஓவியம்: றஷ்மி
மெதுவாகக் கழற்றிய காதணிகள் இரண்டையும் சிறியதொரு டிஷ்யூ காகிதத்தில் வைத்து மடித்துத் தனது சின்னச் சின்ன பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பெட்டியில் வைத்தாள் நிர்மலா. அவ்வளவு காலமும் பெரியதொரு பாரத்தைச் சுமந்துகொண்டு வந்து அப்போதுதான் கீழே இறக்கிவைத்திருக்கும் காது மடல்களின் களைப்பைப் போக்குவதைப் போல அவள் தனது காதுமடல்களை மிருதுவாகத் தடவிக் கொடுத்தாள்.
தாமரைப் பூ வடிவத்தில் செதுக்கப் பட்டிருந்த அந்தப் பழங்கால காதணிகளிரண்டும் அவள் பருவமடைந்த தினத்தில் அவளது பெற்றோரால் இடப்பட்ட மிகப் பெறுமதியான ஒரு சொத்தாக அவளிடம் இருப்பவை. அந்தக் காலத்திலெல்லாம் கழுத்தில் ஒரு தங்கமாலை இருப்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆகவே அவள் அந்தக் காதணிகளை அன்று தொடக்கம் அளவு கடந்து நேசித்து வருகி