பிப்ரவரி 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
அக்டோபர் 2023
    • கட்டுரை
      ஸ்ரீநேசன் கவிதைகள் மொழியமைதியைக் கலைத்த கவிஞன்
      சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதையுலகு இருளின் பிரகாசம்
      அயோத்திதாசர குறிப்பிடும் பின்கலை நிகண்டு
    • CASI
      2023ஆம் ஆண்டில் சத்யஜித் ராயின் படங்கள்: ஒரு மீளாய்வு
    • கதை
      வெற்றுப் பூத் தட்டையும் இடுப்பில் வைத்துக்கொண்டு...
      பாட்டுவெயில்
    • உரையாடல்
      அற்புதன் அழகிரி
    • தொடர் 80+
      இலக்கியவாதியின் மொழியியல் பயணம்
    • கலை
      காற்றை எதிர்த்து
    • நேர்காணல்: கே. நல்லதம்பி
      எழுத்து என் பொழுதுகளைப் பொருளுடையதாக மாற்றுகிறது
    • எதிர்வினை
      காந்தியும் தீண்டாமையும்
    • மதிப்புரை
      இயற்பியல் - உளவியல் - வேதியியல்
      தமிழ்ச் சொல்லடைவு: புதிய திருப்பமும் புதிய திசையும்
    • கவிதைகள்
      அனார் கவிதைகள்
    • தலையங்கம்
      கனவு மெய்ப்படும் காலம்
    • பதிவு: சென்னைப் புத்தகக் காட்சி 2023
      நூல்கள் எழுத்தாளர்கள் வாசகர்கள்
    • கவிதை
      பிறந்தநாள் வருத்தம் தெரிவித்தலும் தன்னிலை விளக்கமும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு பிப்ரவரி 2023 மதிப்புரை இயற்பியல் - உளவியல் - வேதியியல்

இயற்பியல் - உளவியல் - வேதியியல்

மதிப்புரை
சு. இராமசுப்பிரமணியன்

ஜீன் மெஷின்
(அறிவியல்)
வெங்கி ராமகிருஷ்ணன்
தமிழில்: பேரா. சற்குணம் ஸ்டீவன் 
வெளியீடு: 
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை.
நாகர்கோவில் - 1
பக். 320
ரூ. 395

 

2009ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டவர்களில் ஒருவர் வெங்கி எனப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல் Gene Machine. அதனை, அதே தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார், பணிநிறைவுசெய்த உயிரியல் பேராசிரியர் சற்குணம் ஸ்டீபன்.

வெளிநாடுகளில் ஆய்வுகள் நிகழ்த்தப்பெறும் விதத்தைப் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த திகில் கதைபோல் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர் வெங்கி.

உயிரினங்களின் உடல்களைக் கட்டமைக்கும் அடிப்படை அலகு ‘செல்’ (cell). அதனை ஒரு துளி (drop) என்றால், அதற்குள் பல திவலைகள் (droplets) உள்ளன. அவற்றில் ஒரு திவலைதான் ‘ரைபோசோம்’ (Ribosome) எனப்படும் மூலக்கூறு. அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட வேண்டிய மரபுக் குறியீடுகள் டி.என்.ஏ.வில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ரைபோசோம்கள், டி.என்.ஏ. விலிருந்து ஜீன்-குறியீடுகளைப் பெற்று, அவற்றின் அடிப்படையில் புதிய புரதங்களை உருவாக்குகின்றன. எனவேதான் ரைபோசோம்கள் ‘ஜீன் மெஷின்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

ரைபோசோம்களில் ஆய்வுகளை மேற்கொண்டு, ரைபோசோம் துணை அலகுகளின் (30S, 50S, 70S) கட்டமைப்புக்களைக் கண்டறிந்து நோபல் பரிசை வென்றிருக்கும் வெங்கி, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, ஆர்வம் காரணமாக உயிரியல் பட்டப் படிப்பில் சேர்ந்து பயின்றிருக்கிறார். அதனையே தனது ஆய்வுப் புலமாகவும் தெரிவுசெய்திருக்கிறார். படித்தது இயற்பியல், ஆய்வுசெய்தது உயிரியல், நோபல் பரிசு பெற்றது வேதியியல்.

தனது ஆய்வு வரலாற்றை மிகவும் நேர்மையுடன் பதிவுசெய்திருக்கிறார். ஆய்வுப் புலங்களில், ஒருவரது உழைப்பைத் திருடி இன்னொருவர் புகழ்பெறுவதும் உண்டு. மனைவியின் கண்டுபிடிப்பைத் தனதாக்கி நோபல் பரிசு பெற்றவர்களும் உண்டு. ஆனால் 24 வயது இளைஞரான டபிள்யூ.எல். பிராக் என்பவரின்  உழைப்பைத் தனதாக்கிகொள்வாரோ என்று பதற்றத்தை ஏற்படுத்தியவர், மற்றொரு பிராக். அவர் வேறு யாருமல்லர். டபிள்யூ. பிராக்-கின் (W.L. Brag) தந்தை டபிள்யூ.எச். பிராக்தான். இப்படியான சிறுசிறு தகவல்களைக்கூடத் தனது விவரிப்பின் ஊடே அள்ளித் தெளித்துச்செல்கிறார் வெங்கி.

அறிவியலாளர்கள் ஓர் உந்துதல் காரணமாகக் குறிப்பிட்ட துறையில் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். என்றாலும் அத்துறையில் செய்யப்படும் ஆய்வு முதன்மைபெறுவதும், அதன் காரணமாக நோபல் பரிசு போன்று உயரிய பரிசுகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதும் தெரியவரும்போது ஆய்வாளர்களுக்கு ஏற்படும் பதற்றத்தையும், அது ஆய்வில் ஏற்படுத்தும் போட்டியையும், அதன் காரணமான பின்னடைவையும் மிக நேர்மையாக விளக்கிச் செல்கிறார். நோபல் பரிசு காரணமாகத் தனக்குக் கிடைத்த புகழையும் பட்டியலிடுகிறார்.

“திடீரென நான் கண்டுபிடிக்கப்பட்டேன். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எனக்கு வரவேற்புக் கிடைத்தது. அறிவியல் தொடர்பில்லாத பலவற்றைப்பற்றியும்கூட மதத் தலைவரைப்போன்று கருத்துக் கூற நிர்ப்பந்திக்கப்பட்டேன். உலகின் வருங்காலம் பற்றியெல்லாம் கருத்துக் கூற வேண்டியிருந்தது. எனது ஆய்விற்குத் தொடர்பில்லா தலைப்புகளில் பேசும்படி அழைத்தனர்” என்று நோபல் பரிசு பெற்றதற்குப் பின்பான நிலையை நேர்மையுடன் பதிவுசெய்கிறார்.

ஓர் அறிவியல் கருத்தரங்கில் உரையாற்றிய அறிவியலாளர் சர்ச்சிலின் மேற்கோளான “இது முடிவல்ல, முடிவு தோன்றுவதன் தொடக்கமும் அல்ல. இது ஒருவேளை தொடக்கத்தின் முடிவாக இருக்கலாம்” என்னும் கூற்று ரைபோசோம் ஆய்வுகளுக்கும் பொருந்துவதாகக் கூறியிருக்கிறார். அது உண்மை என்பதுபோல, நோபல் பரிசு பெற்றபிறகும், பாக்டீரியாக்களின் ரைபோசோம்களில் காணப்படும் நச்சுக்களைச் செயலிழக்கச்செய்யும் எதிர்-நச்சுக்களின்(anti-biotic) செயல்திறனைக் கண்டறியும் ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

2022இல் குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்திற்குப் பின்,

ஏழை இஸ்லாமியப் பெண்களின் கல்வி உதவித்தொகைக்கு அவர் உதவியிருந்ததையும் குறிப்பிடுகிறார். “இந்துக் குடும்பத்தில் பிறந்திருந்தும் பெண்களின் கல்வி வளர்ச்சியானது உலகெங்கிலும் சமுதாய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எனும் நல்லெண்ணெத்தில் இவ்வுதவியைச் செய்தேன். இச்செயலால் சிலர் என்னைத் துரோகி எனலாம்” என்று அவர் மேலும் குறிப்பிடுவது அவரது மதம் கடந்த மனிதத்தைப் பறைசாற்றுகிறது.

வெங்கி, நோபல் பரிசு பெற்ற பிறகு பாலஸ்தீனத்திற்கும் போய்வந்திருக்கிறார். அவருடன் நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட ஆடா என்னும் பெண் அறிவியலாளர், நோபல் பரிசு பெற்றவுடன், “பாலஸ்தீனிய அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று மிகவும் துணிச்சலாகப் பேசியிருக்கிறார். ஆடா, இஸ்ரேலைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1952ஆம் ஆண்டு சிதம்பரத்தில், பிறந்தவர் வெங்கி. அவரது அப்பா முனைவர் சி.வி. ராமகிருஷ்ணன், உயிரி -

வேதியியல் ஆய்வாளர். அம்மா முனைவர் ஆர். ராஜலட்சுமி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றியவர். பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், 23 வயது

இளைஞனாக இருந்தபோதே, மணமுறிவு பெற்று ஐந்து வயது மகளுடன் வாழ்ந்து வந்த அமெரிக்கப் பெண்மணி வேரா ரோசனைத் திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழ்ந்துவருபவர். பின்னர், இவர்களுக்கு ராமன் என்று ஒரு மகனும் உண்டு. “அவர் எழுத்தாளர், வரைபடக் கலைஞர், சுயமாகச் சம்பாதிப்பவர்” என்று மனைவி வேராவைப் பற்றிப் பெருமையுடன் வெங்கி குறிப்பிடுகிறார்.

முற்போக்குப் பேசிக்கொண்டு பிற்போக்காக வாழ்பவர்களைக்காட்டிலும், சனாதனம் பேணும் குடும்பத்தில் பிறந்து, அதனை உடைத்து வாழ்ந்துகாட்டும் வெங்கியை ஒரு முற்போக்காளர் என்று தாராளமாக அழைக்கலாம். ‘பிறப்பு ஒருவரின் தேர்வு அல்ல’ என்று தெரிந்திருந்தும், பாரதியையே ‘பார்ப்பான்’ என்று இழிவுபடுத்தும் போலி முற்போக்காளர்களுக்கு இதனை ஏற்பது கடினமாகவே இருக்கும்.

“சிலர் புகழுடன் பிறக்கிறார்கள், ஒருசிலர் புகழ் பெறுகிறார்கள், ஒரு சிலரின்மீது புகழ் திணிக்கப்படுகிறது” என்னும் ஷேக்ஸ்பியரின் இன்பவியல் நாடகமான Twelth Night–இல் மல்வாலியோவின் கூற்றை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். இந்நூலை வாசித்து முடிக்கும்போது, வெங்கி ராமகிருஷ்ணன் மிகவும் கடுமையாக உழைத்து, நோபல் பரிசு பெற்றுப் புகழ் பெற்றிருக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

பொதுவாகவே மொழிபெயர்ப்பானது மிகுந்த உழைப்பைக் கோரிப்பெறுவது. ஓர் அறிவியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தல் அதனினும் கடினமான பணியாகும். அதிலும் ஜீன் மெஷின் போன்ற அறிவியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தல் மிகவும் சிக்கலானது. காரணம், ரைபோசோம் ஆய்வும் அதனை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட ஜீன் மெஷின் நூலும் இயற்பியல், உயிரியல், வேதியியல் ஆகிய மூன்று துறைகளை உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது.

அதனை ஓர் அறிவியல் துறை மட்டுமே சார்ந்த பேராசிரியர் மொழிபெயர்ப்பு செய்வது மிகவும் கடினமான பணியாகும். ஒரு சொல்லைப் புரிந்துகொள்வதற்குக்கூடச் சில நாட்கள் தேவைப்படலாம்; அதனைப் புரிந்துகொள்ளாமல் மொழியாக்கம் செய்யவும் முடியாது.

அந்த விதத்தில், உயிரியல் துறைப் பேராசிரியர் சற்குணம் ஸ்டீபன் பல மாதங்கள் மிகக்கடுமையாக உழைத்திருந்தால் மட்டுமே இப்படி ஒரு மொழிபெயர்ப்பு நூலை முழுமை செய்திருக்க முடியும். மொழிபெயர்ப்பும்கூட, ஆற்றொழுக்காகச் சென்றுகொண்டிருக்கிறது.

ஜீன் டி.என்.ஏ. ஆகியவற்றை மரபணு என்று பொதுப்படையாகத் தமிழில் குறிப்பிடுவதால், அந்தக் குழப்பத்தைப் போக்கும்விதமாக, மொழிபெயர்ப்பாளர் ‘ஜீன் மெஷின்’ என்று ஆங்கிலத் தலைப்பைப் பயன்படுத்தியிருப்பார் என்று கருதுவதற்கும் இடமுண்டு; அதில் தவறேதும் இல்லை.

கிரேக்கம், இலத்தீன், பிரஞ்ச், ஜெர்மன் போன்ற பிறமொழி அறிவியல் சொற்களை அப்படியே உள்வாங்கியதால்தான், இலத்தீன், ஜெர்மன் போன்ற அறிவியல் மொழிகளைப் பின்னுக்குத் தள்ளி, அறிவியல்மொழியாக முன்னுக்கு வந்திருக்கிறது ஆங்கிலம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அறிவியல் சொற்களை மொழிபெயர்க்கும்போது, நேரடியாகத் தமிழில் புழக்கத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்தலாம். அப்படியான சொற்கள் இல்லாதபோது, மொழிமாற்றம் செய்யலாம். அதுவும் முடியாதபோது அந்த ஆங்கிலச்சொல்லை அப்படியே தமிழில் எழுதுவதால், தமிழ் வளருமே தவிர வீழாது.

தமிழில் அறிவியல் எழுத முடியாது, கற்பிக்க முடியாது என்னும் மொழி அறியாமை உள்ளவர்களும், தமிழ் இலக்கியம்போல இலக்கண முறைப்படியே மொழிபெயர்க்க வேண்டும் என்று சொல்லும் அறிவியல் அறியாமை உள்ளவர்களும், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக உள்ளார்கள்.

ரைபோசோம் தொடர்பான ஆய்வுகளை முன்வைத்து எழுதப்பட்ட நூல் என்றபோதிலும், மற்றவர்களும் வாசிக்கும் விதத்தில் நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன். ரைபோசோம் ஆய்வில் போட்டிகள் ஏற்பட்ட பிறகு நடந்த நிகழ்வுகளை மிகவும் விறுவிறுப்பாகச் சொல்லிச்செல்கிறார். அதனை அப்படியே சுவைபடத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் சற்குணம் ஸ்டீபன். இதுபோன்ற பல மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழுக்கு வர வேண்டும்.

‘தன்வரலாறு’போல எழுதப்பட்டிருக்கும் இந்நூல், உண்மையில் அறிவியல் துறைகளில் ஆய்வுகளின்வழியே சாதிக்க விரும்பும் நம் மாணவச்செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாக அமையும்.

சு. இராமசுப்பிரமணியன், இயற்பியல் பேராசிரியர் (பணி நிறைவு)தோவாளை.

 

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.