2023ஆம் ஆண்டில் சத்யஜித் ராயின் படங்கள்: ஒரு மீளாய்வு
1992 ஆம் ஆண்டில், ஆஸ்கர் அகாதமி விருதுக் குழு கேட்டுக்கொண்டதன் பேரில் வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் ஷிக்கலைக் இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராயின் திரை நறுக்குகளைக் கொண்டு காட்சித் தொகுப்பு ஒன்றை உருவாக்கினார். ராய் படங்களின் காட்சிகள் எதுவும் அமெரிக்காவில் இல்லாத நிலையில், அவர் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம், இங்கிலாந்தின் சேனல் 4 ஆகியவற்றிடம் அந்தக் காட்சிகளைக் கேட்டுப் பெற வேண்டியிருந்தது.
ராயின் படைப்புகள் அப்போதே ‘கடந்த காலத்தின் நினைவுச் சின்னமாக’ ஆகிவிட்டிருந்தனவா அல்லது அவரது சினிமாவின் தனித்துவமான அடையாளமான உலகளாவியத் தன்மை அவருக்குப் பிந்தைய காலத்தில் சாத்தியமற்றதாக ஆகிவிட்டதா?
இரண்டாவது காரணமே சரியானதாக இருக்கலாம். ராயின் படங்கள் 1990களில் மேற்குலகில் அரிதாகவே திரையிடப்பட்டன. ராயின் படைப்புகளில் இருக்கும் மனிதநேயம் அவருக்கு நன்மை பயக்கவில்லை என்று அமெரிக