சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதையுலகு இருளின் பிரகாசம்
அறிவியல் நிர்மாணிக்கும் உலகம் பருண்மையானது. தொட்டுணரக்கூடியது. தர்க்கப்பூர்வ நிரூபணங்கள் கொண்டது. நிரூபணங்களாக நிறுவப்படக்கூடியவற்றை மட்டுமே நம்ப வேண்டும் என்று வலியுறுத்துவது. மாற்றுத் தர்க்கங்களை அவநம்பிக்கையோடு அணுகுவது. மறுபுறம், ஆன்மவியலும் மீமெய்யியலும் வனைந்து அளிக்கும் உலகமோ புகைமூட்டமானது. பொது அனுபவத்தின் நிபந்தனைகளுக்குள் உள்ளடங்க மறுப்பது. பொது அனுபவம் என்ற ஒன்றே இல்லை; தனிமனித அனுபவப் பரப்பு மட்டுமே உண்டு என்று வாதிடுவது; இந்த வாதத்தை மட்டுமே பரிந்துரைப்பது.
என்றாலும், தம்மளவில் அவை ஒன்றுக்கொன்று எதிரானவை என்று கொள்ள வேண்டியதில்லை. உண்மையில், இரண்டு வெவ்வேறு தர்க்க முறைகள் அவை. ஒன்றை வைத்து இன்னொன்றை அளவிடுவது சாத்தியமேயில்லை.
புனைவு கட்டியெழுப்பும் உலகம், மேற்சொன்ன இரண்டு வகைச் சிந்தனாமுறைகளையும் ஒருங்கே தனக்குள் கொண்டது. பருவுலகத்தின் அலகுகளில் காலையூன்றியே அதன் வரையறைகளைத்