நூல்கள் எழுத்தாளர்கள் வாசகர்கள்
46ஆவது சென்னைப் புத்தகக் காட்சி ஜனவரி 6ஆம் தேதி யிலிருந்து 22ஆம் தேதிவரை நடைபெற்றது. காலச்சுவடு அரங்கு கலாபூர்வமாகவும் வாசகர்கள் தங்கள் ரசனைக்கேற்பப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கத் தோதான வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது. வாசகர்களும் எழுத்தாளர்களும் காலச்சுவடு அரங்கின் வடிவமைப்பைப் பாராட்டினார்கள்.
அமைச்சர் மனோ தங்கராஜுடன் பொருளாதாரச் சிந்தனையாளர் ஜெயரஞ்சன்
காலச்சுவடு அரங்கின் வாசலில் அமைக்கப்பட்டிருந்த ரோஹிணி மணியின் ‘installation of mine or my installation’ என்ற காகிதக் கூழ் இன்ஸ்டல்லேஷன் வாசகர்களால் வெகுவாகக் கவனிக்கப் பட்டது. புகைப்பட, சுயபுகைப்பட ஆர்வலர்களின் மையமாகவும் அது இருந்தது.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்
காலச்சுவடு அரங்கில் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பிறமொழி எழுத்தாளர்கள் ஆகியோருடனான வாசகர் சந்திப்பு, மறைந்த முன்னோடி எழுத்தாளர்களின் வாரிசுகளுடனான சந்திப்பு; கலை நிகழ்வுகள் ஆகியன சிறப்பாக நடைபெற்றன.
ஆழி செந்தில்நாதன்
ஜனவரி 7: மறைந்த மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் புதல்வர்களான ராமகிருஷ்ணன், ரவிசங்கர் ஆகியோர் அரங்கிற்கு வருகை தந்தனர். 8ஆம் தேதி ஜெயகாந்தனின் புதல்வரான ஜெ. ஜெயசிம்மன் வாசகர்களைச் சந்தித்தார். அன்று மு. இராமநாதன் எழுதிய ’கிழக்கும் மேற்கும்’ நூல் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவரும் பொருளாதாரச் சிந்தனையாளருமான ஜெயரஞ்சன் நூலை வெளியிட்டார்; பத்திரிகையாளரும் அருஞ்சொல் இணைய இதழின் ஆசிரியருமான சமஸ் நூலைப் பெற்றுக்கொண்டார். தமிழக அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சம் மனோ தங்கராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பன்னாட்டுப் பிரதிநிதிகளுடன் கண்ணன்
ஜனவரி 9: மறைந்த முன்னோடி எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் புதல்வரான அ. சாரங்கன் வாசகர்களோடு அளவளாவினார்.
இயக்குநர் வசந்த் எஸ். சாய், பெருந்தேவி
ஜனவரி 10: ஜூலி குமார், டோலக் அஸ்வின், கானா பாலமுருகன் ஆகியோரின் கானா பாடல் கலை நிகழ்வு நடைபெற்றது. அன்று ‘சண்டைக்காரிகள்’ நூலின் ஆசிரியரான ஷாலின் மரிய லாரன்ஸ் வாசகர்களைச் சந்தித்தார். மேலும் எழுத்தாளர் களந்தை பீர்முகம்மதுவின் ‘நிழல் நதி’ நாவல் வெளியீட்டு நிகழ்வும் நடந்தேறியது. நூலை ஊடகவியலாளர் கவிதா முரளிதரன் வெளியிட வாசகரான குபேந்திரன் ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.
ஷாலின் மரிய லாரன்ஸ், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்
ஜனவரி 11: ஜி. குப்புசாமி எழுதிய ’கண்ணாடிச் சொற்கள்’ நூலின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. நூலை எழுத்தாளர் மருதன் வெளியிட சரவணன் சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
இயக்குநர் தீபக், எழுத்தாளர் ஜே.பி. சாணக்யா, ஒளிப்பதிவாளர் முரளி.ஜி
ஜனவரி 12: வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதியுடனான வாசகர்களின் சந்திப்பு நடைபெற்றது. லாவண்யா சுந்தரராஜனின் ‘முரட்டுப்பச்சை’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது. பதிப்பாளரும் மொழிபெயர்ப்பாளருமான விலாசினி ரமணி வெளியிட எழுத்தாளரும் செய்தி வாசிப்பாளருமான சித்ரா பாலசுப்ரமணியன் பெற்றுக்கொண்டார்.
சல்மா, மைதிலி கண்ணன், தேவேந்திர பூபதி
ஜனவரி 13: கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுடனான வாசகர் சந்திப்பும் ஐஸ்வர்யாஸ்ரீ, சஹானா சங்கர், அருண் சி.ஜே., விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் கர்னாடக இசை நிகழ்வும் நடைபெற்றன.
அரவிந்தனுடன் மருத்துவர் கு. சிவராமன்
ஜனவரி 14: எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘மாறாது என்று எதுவும் இல்லை – பெஜவாடா வில்சன்’ என்ற நேர்காணல் நூல் வெளியீடும் வாசகர் சந்திப்பும் நடைபெற்றன. நூலை டி.எம். கிருஷ்ணா வெளியிடப் பணியின்போது உயிர்நீத்த துப்புரவுத் தொழிலாளியின் மனைவியான நாகம்மாள் பெற்றுக்கொண்டார்.
அ. ராமசாமி, ஷோபாசக்தி, கருணாகரன்
ஜானகி அந்தோனி, சாரதி குழுவினர்
ஜனவரி 15: பெருந்தேவியுடனான வாசகர் சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து செல்வம் அருளானந்தத்தின் அனுபவப் புனைவான ’பனிவிழும் பனைவனம்’ நூலின் வெளியீட்டு நிகழ்வும் நடந்தேறியது. நூலை கவிஞர் போகன் சங்கர் வெளியிட சாகித்திய அகாதெமி விருது எழுத்தாளர் இமையம் பெற்றுக்கொண்டார்.
ஜெயகாந்தனின் புதல்வர் ஜெ. ஜெயசிம்மனும் கண்ணனும்
ஜனவரி 16: கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக்குடனான வாசகர்களின் சந்திப்பு நடைபெற்றது. பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த பன்னாட்டுப் பிரதிநிதிகள் சிலர் காலச்சுவடு அரங்கிற்கு அன்றும் அதற்கு அடுத்த நாளும் வருகைபுரிந்தார்கள்.
கண்ணன், சமஸ், மனோ தங்கராஜ், ஜெயரஞ்சன், மு. இராமனாதன்
கு. அழகிரிசாமியின் புதல்வர் அ. சாரங்கன் வாசகரோடு
ஜனவரி 17: கவிஞர் சல்மாவின் வாசகர் சந்திப்பு நடைபெற்றது.
தன் மகள், நண்பர்களுடன் களந்தை பீர்முகம்மது
கிருஷ்ண பிரபு, அரவிந்தன், மருதன், ஜி. குப்புசாமி, சரவணன் சுப்பிரமணியன்
ஜனவரி 18: மறைந்த முன்னோடி எழுத்தாளர் தி. ஜானகிராமனின் புதல்வியான உமாசங்கரி வாசகர்களைச் சந்தித்தார். தொடர்ந்து ஜானகி, ஸ்ரீதேவி, சாரதி குழுவினரின் கவிதை நிகழ்வும் நடைபெற்றது. ஆத்மாநாம் கவிதைகளை அவர்கள் நவீன நாடக வடிவில் நிகழ்த்தினார்கள். அன்று கண்காட்சியைப் பார்வையிட வந்திருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் காலச்சுவடு அரங்கிற்கு வருகைபுரிந்தார்கள். நூல்களையும் கலை நிகழ்ச்சியையும் சிறிது நேரம் பார்வையிட்டுச் சென்றார்கள்.
ஆ.இரா. வேங்கடாசலபதியுடன் வாசகர் சந்திப்பு
விலாசினி ரமணி, லாவண்யா சுந்தரராஜன், சித்ரா பாலசுப்ரமணியம்
ஜனவரி 19: ஆசுதோஷ் பரத்வாஜ் ஆங்கிலத்தில் எழுதி அரவிந்தன் மொழிபெயர்த்த ‘மரணத்தின் கதை’ நூல் வெளியீடும் நூலாசிரியர் சந்திப்பும் நிகழ்ந்தன. நூலை எழுத்தாளர் மருதன் வெளியிட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ம. சுசித்ரா பெற்றுக்கொண்டார். வாசகர்கள் ஆசுதோஷுடன் ஆர்வத்துடன் உரையாடினார்கள்.
கர்நாடக சங்கீதப் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுடன் இயக்குநர் மிஷ்கின்
விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தி, ஐஸ்வர்யாஸ்ரீ, சஹானா சங்கர், அருண் சி.ஜே. குழுவினர்
ஜனவரி 20: பாரதியியல் அறிஞர் ய. மணிகண்டனுடனான வாசகர் சந்திப்பு நடைபெற்றது. தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறுகதையாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜே.பி. சாணக்யாவின் ’பெருமைக்குரிய கடிகாரம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் முரளி.ஜி வெளியிட ’விட்னெஸ்’ திரைப்படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தீபக் பெற்றுக்கொண்டார்.
டி.எம்.கிருஷ்ணா, பெஜவாடா வில்சன், நாகம்மாள், பெருமாள்முருகன்
இமையம், போகன் சங்கர், செல்வம் அருளானந்தம், கண்ணன்
சென்னைப் புத்தகக் காட்சி – 2023, எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களும் உற்சாகமளித்து அவர்கள் பணிகளை மேலும் திறம்படச் செய்வதற்கான உத்வேகத்தை அளித்திருக்கிறது. பெரும் திரளாக வந்திருந்து இந்தக் கண்காட்சியை வெற்றிகரமான நிகழ்வாக ஆக்கிய வாசகர்களுக்குக் காலச்சுவடு பதிப்பகம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக்
தி. ஜானகிராமனின் புதல்வியான உமாசங்கரி
சல்மாவுடன் வாசகர்கள்
ஆசுதோஷ் பரத்வாஜ், மருதன், ம. சுசித்ரா
பெருமாள்முருகன், வண்ணநிலவன், கண்ணன், டி.எம். கிருஷ்ணா, அரவிந்தன், விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தி, அருண் சி.ஜே.
காலச்சுவடு குழுவினர் (இடமிருந்து): சபிதா, லக்ஷ்மி, அய்யாசாமி, ஜெபா, முத்து வைரவன், நாகராஜன்,
மு. மகேஷ், தாமோதரன், அஜித், பத்தினாதன், ஜாமி ரொபின்சன், ஐரின் ஜெனிஃபர்
(அமர்ந்திருப்போர்): கண்ணன், மைதிலி கண்ணன், அரவிந்தன்