அற்புதன் அழகிரி
ஓவியம்: டிராட்ஸ்கி மருது
எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் இலக்கியப் பங்களிப்புகள் குறித்துத் திருச்சிராப்பள்ளி வானொலியில் 44 ஆண்டுகளுக்கும் முன் ஒலிபரப்பான ஒரு நேர்காணலின் எழுத்து வடிவம் இது. எழுத்தாளர் வல்லிக்கண்ணனிடம் அழகிரிசாமி குறித்து கி. ராஜநாராயணன் கேள்விகள் கேட்டு விவரங்கள் பெறுமாறு அமைந்தது இந்த நேர்காணல்.
“கு. அழகிரி சாமியுடன் நீங்கள்தான் அதிக நட்பும் பழக்கமும் கொண்டிருந்தீர்கள் என்பது ரேடியோ நண்பர்களுக்குத் தெரியாது. அதனால்தான் என்னை அதிகம் தொடர்புடைய நபராக எண்ணி என்னிடம் உங்களைக் கேள்விகள் கேட்கும்படி ஏற்பாடு செய்ய முன் வந்திருக்கிறார்கள். கு . அழகிரிசாமி பற்றி எப்படி, என்ன சொல்ல வேண்டும், விளக்கமாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த எவ்வாறு அமைக்க வேண்டும் என்று நாம் கலந்து பேசிக்கொள்ளல