வீடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாத நட்புகள்
கவிஞர் சல்மா
நூலில் நேரக் கூடாத பத்துக் குற்றங்களில் ஒன்றாகக் ‘கூறியது கூறல்’ என்பதையும் தமிழ் இலக்கணம் கருதுகிறது. இன்றும் கூறியது கூறலை இலக்கியக் குறைபாடாகவே எண்ணும் விமர்சன மரபு இருக்கிறது. அதேசமயம் யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் இதை ஓர் இலக்கிய உத்தியாகக் கூறுகின்றன. யாப்பிலக்கணத்தில் ‘இரட்டைத் தொடை’ என்று ஒன்றுண்டு. ‘அடி முழுதும் வந்த மொழியே வருவது இரட்டை’ என்பது காரிகை. ஒருசொல்லே ஓரடி முழுதும் அடுக்கி வருமானால் அது இரட்டைத் தொடை.
ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
விளக்கினிற் சீறெரி ஒக்குமே ஒக்கும்
குளக்கொட்டிப் பூவின் நிறம்
என்னும் பாடலை அதற்குச் சான்றாக உரை காட்டும். ‘குளக்கொட்டிப் பூவின் நிறம் விளக்குச் சுடரைப் போன்றது’ எ