தொலைந்துபோனவையா கண்டெடுக்கப்பட்டவையா?
காலம் எதுவென்று உறுதியாகச் சொல்ல முடியாத இராமாயணக் கதைக் காலத்துக்குச் செல்லலாமா? இராமபிரானின் உன்னத ஆட்சி மலர்ந்து, எல்லார்க்கும் எல்லாம் கிடைத்து, பொங்கும் மகிழ்ச்சியும் இனிமையும் நிறைவும் என்றும் எங்கும் தங்கிப் பல்லாண்டுக் காலம் ஆகிவிட்டது. ஒரு நாள் இராமன் அரசவையில் வீற்றிருக்கிறான். அவன் அணிந்திருந்த மோதிரம் கழன்று தரையில் விழுகிறது. உடனே பூமியைத் துளைத்து உள்ளே சென்று காணாமல் போய்விடுகிறது. ‘அதைக் கண்டுபிடித்து எடுத்து வா’ என அனுமனுக்கு இராமன் ஆணை இடுகிறான். எந்த உருவத்தையும் எடுக்க வல்ல அனுமன் துளைக்கேற்பத் தன்னை மிகவும் சுருக்கிக்கொண்டு அதனுள் செல்கிறான்; செல்கிறான், செல்கிறான், சென்றுகொண்டே இருக்கிறான். இறுதியாகப் பூமியின் கீழ் விளிம்புவரை சென்று வெளிப்படுகிறான். கணக்கிடமுடியாத தொலைவில் ஆவிகள் வாழும் உலகம் கீழே உள்ளது. அங்கே போய்த் திடுமென விழுகிறான்.
அங்குள்ள மகளிர் அனுமன