பாரதியும் சகஜானந்தரும்
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட ஆளுமைகளில் இருவர் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். ஒருவர் அயோத்திதாச பண்டிதர்; இன்னொருவர் சகஜானந்தர். அயோத்திதாசர் இன்று பெரிதும் உரிய இடத்தைப் பெற்றிருக்கின்றார் என்று சொல்லலாம். உரிய இடத்தைப் பெறவேண்டியவராகச் சகஜானந்தர் உள்ளார். அயோத்திதாசரின்மீது செலுத்தப்படும் முயற்சிகள் கணிசமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கையெதிரே, கண்ணெதிரே தரவுகளாகக் காட்சி தருகின்ற ஞான. அலாய்சியசின் அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதிகளை அடிப்படையாகக்கொண்டு வெவ்வேறு பரிமாணங்களில் நூல்கள் பல்கிப் பெருகுகின்றன. ஞான. அலாய்சியசின் தொகுப்பு முயற்சிக்கும் அடிப்ப