மூடி மறைக்கும் கலை
கலாக்ஷேத்ரா மாணவிகளின் போராட்டம்
பாலியல் குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கவும் பூசி மெழுகவும் நிறுவனங்கள் முயன்றாலும் பாதிக்கப்பட்டவர்களின் ஒன்றுபட்ட போராட்டமே நீதியைப் பெறுவதற்கான சிறந்த வழி என்பதைக் கலாக்ஷேத்ரா விவகாரம் உணர்த்துகிறது.
உலகப் புகழ் பெற்ற கலை நிறுவனமான கலாக்ஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டுச் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. நடனக் கலை தேவதாசிகளுக்கு மட்டுமே என்றிருந்த நிலையை மாற்றி, அதை அனைவரும் கற்கும் வகையில், சமூகத்தில் அதற்கான மரியாதையை உருவாக்கும் நோக்கத்துடன் ருக்மணி தேவி அருண்டேல் 1940இல் கலாக்ஷேத்ராவை நிறுவினார். பாரம்பரிய மதிப்பீடுகளை நவீன காலத்திற்கு ஏற்றவகையில் புதுப்பி