கவிமணி கவிதைகளின் பதிப்பும் மு. அருணாசலனாரின் பங்களிப்பும்
“தேசிக விநாயகம் பிள்ளை அவர்களைப் பற்றி இன்று எல்லோரும் பேசுவது நாகரிகமாகிவிட்டது. ஆனால் அவருடைய கவிதைத்தொகுதி வெளிவந்த காலத்தில் அவரைத் தெரிந்து கௌரவித்தவர்கள் மிகவும் அரியர். அவருடைய வாழ்க்கைக்குறிப்புகள் கிடைப்பதே மிக்க சிரமமாயிருந்தது. அவர் தம்மை விளம்பரப் படுத்திக் கொள்பவர் அல்லர். இத்தொகுப்பில் கண்டுள்ள ‘நாஞ்சில் நாட்டுக் கவிஞர்’ என்ற கட்டுரை வெளிவந்த பிறகுதான் தமிழ் மக்கள் அவரைப் பற்றி அறிந்தார்கள் என்று நான் இப்போது பெருமையோடு சொல்லிக்கொள்ள முடியும்” 1942இல் சக்தி இதழில் கவிமணியைக் குறித்துத் தான் எழுதிய கட்டுரையைப் பற்றி ‘குமரியும் காசியும்’ என்னும்