பாரதி ஞானத் தேடல்
மகாகவி பாரதியைப் பற்றி தி. ஜானகிராமன் நிறைய எழுதவில்லை என்ற குறை இருவரின் தீவிர வாசகனாக எனக்கு இருக்கிறது. இதை எழுத்தில் ஓரிரு இடங்களில் பதிவும் செய்திருக்கிறேன். ‘இது உங்கள் பேராசை. நீங்கள் ஆசைப்படுகிற அளவுக்கு பாரதியைப் பற்றி ஜானகிராமன் எழுத வேண்டுமா என்ன? இவரை அவர் எவ்வளவு பாதித்தாரோ அந்த அளவுக்கு அவரைப் பற்றி இவர் எழுதியிருக்கிறார்’ என்ற வரிகளையும் வாக்கியங்களையும் இலக்கிய நண்பர்கள் மேற்கோள்காட்டவும் செய்தனர். அவர்கள் குறிப்பிட்டது ஒருவிதத்தில் சரியானதுதான். ஆனால் என் அறிவுக்கு எட்டியது சொற்பமே. என்னுடைய எதிர்பார்ப்பும் கொஞ்சம் அதிகம்தான். மிக