சிந்தும் விருத்தமும் கு. அழகிரிசாமி உருவாக்கிய பதிப்புகள்
‘இடைசைப் புலவர்’ என்பது கு. அழகிரிசாமியின் புனை பெயர்களுள் ஒன்று. ஆனால் அவர் புலவரில்லை. அப்படி இல்லாத போதும் சிந்துப்பாவகையில் அமைந்த காவடிச்சிந்துவையும் விருத்தப்பா வகையில் உருவாகியிருந்த கம்பராமாயணத்தையும் பதிப்பித்த மொழி ஆளுமை உடையவர் கு. அழகிரிசாமி. பழம் தமிழ் நூல்களைப் பதிப்பித்த பணியைச் செய்த ஒரே நவீன எழுத்தாளரும் அவர்தான். கு. அழகிரிசாமி பதிப்பித்தவை இரண்டு நூல்கள்: ஒன்று சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் பாடிய காவடிச்சிந்து (1960), இரண்டாவது கம்பராமாயணம் (1958, 1959, 1965). மூன்று தொகுதிகளாக அவை வெளிவந்தன.
வையாபுரி பிள்ளையின் பதிப்பு முறையை முன்வைத்து, அழகிரிசாமியின் பதிப்பு முயற்சியைப் பற்றி ஒரு கட்டுரையைப் பெருமாள்முருகன் (2011) விரிவாக எழுதியுள்ளார் என்பதை இவ்விடத்தில் குறிக்கலாம்.
காவடிச்சிந்து: கு. அழகிரிசாமி பிற