தீயில் விழுந்த சிறகுகள்
ஓவியம்: றஷ்மி
யாழ்ப்பாண நூலகம் 1981 ஜுன் மாதம் முதலாம் நாள் எரிக்கப்பட்டபோது ஆற்றாமையுடனும் சினத்துடனும் அதனைப் பார்த்த பலரில் நானும் ஒருவன். எனது ‘இரண்டாவது சூரிய உதயம்’ எனும் கவிதை அந்தத் தணலில் விளைந்தது. எனது முதலாவது கவித்தொகையின் தலைப்பும் அதுதான். யாழ் நூலக எரிப்பைப் பற்றிக் கவி நுஃமான் எழுதிய ‘புத்தரின் படுகொலை’ எனும் கவிதை அப்போது சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. யாழ் நூலக எரிப்பின்போது இப்போது இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவும் அவரோடு வேறு பல அமைச்சர்களும் யாழ்ப்பாணத்தில் தங்கி நின்றார்கள். அவர்கள் அனைவருமே எரிப்புக்கு உடந்தை எனப் பல சிங்கள ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டு கிறார்கள்.
நூலக அழி