யாவர்க்குமாம்
ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
கற்பகம் வெளியில் கிளம்பும்போது வாசலில் இருந்த கடையில் எதையோ வாங்கிக்கொண்டிருந்த முத்துலட்சுமி அவளைப் பார்த்தாள். வழக்கமான சிறு புன்னகை அவள் உதட்டில் தோன்றியது. அடுத்த கணமே அது வாய் விரிந்த சிரிப்பாக மாறியது. கூடவே கண்களும் விரிந்தன. “ட்ரஸ்ஸுல்லாம் சூப்பரா போட்டுகினு எங்க கெலம்பிட்ட?” என்று கேட்டாள். “ட்ரேஸ்ஸு புச்சா? எங்க வாங்கின? என்னா விசேசம்? ஒன்னியும் சொல்றதுல்ல. சொன்னா நாங்களும் கூடவே வந்துருவோம் பாரு...” என்றாள் தொடர்ந்து.
கற்பகம் சிரித்தாள். “புத்சுல்லாம் ஒண்ணியும் இல்லக்கா. புள்ளியார் கோயில் தெருல ஒரு ப்ளாட்ல வேல செய்றன்ல... அந்த அக்கா குட்த்தாங்க. அவங்க பயசாயிட்சின்னு எனக்கு குட்த்தாங்க. நீ என்னடான்னா எங்க