வானத்து அமரன்
ஓவியங்கள்: ஆதிமூலம்
“கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு, வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் கொண்டு தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது. அதைக் கையாண்ட நானும் கல்வி கற்றதின் விளைவாக பாஷைக்குப் புதிது. இதனால், பலர் நான் என்ன எழுதுகிறேன் என்பது பற்றிக் குழம்பினார்கள். சிலர் ‘நீங்கள் எழுதுவது பொது ஜனங்களுக்குப் புரியாது’ என்று சொல்லி அனுதாபப்பட்டார்கள். அந்த முறை நல்லதா கருத்து ஓட்டத்திற்கு வசதி செய்வதா என்பதை அதே முறையில் பலர் எழுதிய பின்புதான் முடிவுகட்ட முடியும்..”
தனது எழுத்து நடை குறித்து இப்படிப் பிரஸ்தாபித்தவர் புதுமைப்பித்தன்.
மகாகவி பாரதிக்குப் பிறகு