உற்சாகம்
ஓவியங்கள்: ரவி பேலட்
கடிகாரம் மணி ஒன்பதைக் காட்டியது. உரத்த மணியோசை, தொடர்ந்து மெல்லிய மணியோசை, அதன் எதிரொலி. பின் அமைதி. சூரிய ஒளியின் சாயம் புல்வெளி மேல் படர்ந்து, வீட்டின் சிவப்புச் சுவரின் மேலேறி, ஆயிரம் பனி விளக்குகளாக ஐவி கொடியில் பளபளத்தது. ஜன்னல் வழியாக, மெல்லிய திரைச்சீலையின் காவலைத் தாண்டி சூரிய ஒளி அறையை ஆக்கிரமித்தது.
லூயிஸா, தலையணை மேல் தலைமுடி படர, சுருண்ட போர்வைகளின் மேல் இரு கை விரித்துச் சிலுவையில் அறையப்பட்டது போல் அசைவின்றிக் கிடக்கிறாள். சூரியனின் வெப்பமும் ஒளியும் அறையை நிறைத்தன. லூயிஸா இமைத்து, முகம் சுளித்து, வாயை இறுக்கமாக மூடி, கண்களைத் திறந்து, பின் அறையின் முகட்டை வெறித்துப் பார்க்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாகப் பகல் அவளுள் நுழைகிறது. எங்கோ தூரத்தில் ச