மனக்கோட்டையும் ஏமாற்றமும்
ஓவியங்கள்: செந்தில்வேல்
பழ. அதியமான் தொகுத்து, காலச்சுவடு இரண்டு தொகுதிகளாகக் கொண்டுவந்துள்ள ‘கு. அழகிரிசாமி கதைகள்’ தொகுப்பில் ஆனந்தபோதினி இதழில் வெளியான ஐந்து கதைகள் இடம்பெற்றுள்ளன. ஆனந்தபோதினி பழைய இதழ்களைப் பார்த்தபோது அக்கதைகள் வெளியான ஆண்டு குறித்த மேலதிகத் தகவலை அறிய முடிகிறது: அவரது முதல் கதை என்று தொகுப்பில் குறிப்பிடப்படும் ‘உறக்கம் கொள்ளுமா’ ஆனந்தபோதினி 1942 ஜனவரி 14 இதழில் வெளியாகியிருக்கிறது. மூன்றாவது கதையான ‘கவியும் காதலும்’ ஆனந்தபோதினி 1942 பிப்ரவரி 12இதழில் வெளியாகியுள்ளது. ஆறாவது கதையாகக் காட்டப்படும் ‘பைரவி’ ஆனந்தபோதினி 1943 டிசம்பர் 16 (தொகுப்பில் 1942 என்று குறிப்பிட்டுள்ளது) இதழிலு