கு. அழகிரிசாமியும் பாரதியும்
“பாரதிக்குப் பின் தமிழில் கவிதையே தோன்றவில்லை. ஒரு சிலர் பாடியுள்ள ஒரு சில பாடல்கள் நல்ல சொல்லாட்சியுடன் அமைந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் ஒரு பாடலைக் கவிதை என்று பாராட்டுவதற்கு இந்தச் சொல்லாட்சி ஒன்று மட்டும் போதாது. சுருக்கமாகச் சொன்னால் பாரதிக்குப் பின் பாடாத கவியே நல்ல கவி.”
இந்த அதிரடியான கருத்தை ஒரு நேர்காணலில் மறைந்த எழுத்தாளர் கு. அழகிரிசாமி தெரிவித்திருந்தார். பரவலாக வாசிக்கப்பட்ட தமிழ் இலக்கிய இதழாக விளங்கிய தீபம், எழுத்து ஆளுமைகளை ‘இலக்கியச் சந்திப்புகள்’ என்ற தலைப்பில் நேர்காணல் கண்டு மாதந்தோறும் 1960களில் வெளியிட்டு வந்தது. அந்தத் தொடரில் அழகிரிசாமியை எழுத்தாளர் கிருஷ்ண மணி எடுத்த நேர்காணலில் (1966 நவம்பர்) பாரதி தொடர்பாக இரண்டு கேள்விகள் இடம் பெற்றன. “பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை நிலை எப்படி உள்ளது?” என்பது அதில்