விருது
ஆகஸ்ட் 11 அன்று தில்லியில் நடைபெற்ற இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் தமிழ் மொழியின் சிறந்த பதிப்பாளர் விருது டிஸ்கவரி புக்ஸ் பதிப்பாளர் வேடியப்பனுக்கு வழங்கப்பட்டது. பதிப்பு, விற்பனை ஆகிய துறைகளில் ஈடுபாட்டுடன் புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருபவர் வேடியப்பன். சென்னை கே.கே. நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் நூல் விற்பனையகம் இலக்கியவாதிகளும் வாசகர்களும் சந்திப்பதற்கான மையமாக விளங்கிவருகிறது. புத்தக விற்பனையை எழுத்தாளர்களும் வாசகர்களும் இணைந்த இலக்கியச் செயல்பாடாக மாற்றும் முனைப்புடன் செயல்பட்டுவரும் வேடியப்பன் பெற்றுள்ள விருதுக்காகக் காலச்சுவடு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.