கடிதங்கள்
Chat GPT குறித்த சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் ‘உரையாடி - உன்னதங்களும் உபத்திரவங்களும்’ கட்டுரை பல எதார்த்தங்களை வெளிப்படுத்துவது; மிக அவசியமானது. Chat GPTஐ மாபெரும் அறிவுப் புரட்சியாக பலரும் வருணிக்கிறார்கள். இனி கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள் தேவையில்லை என்கிறார்கள். அறிவுலகில் அதற்கெதிராகப் பேசுபவர்கள் அறிவற்றவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இதனைக் கல்விச் சூழலில் பயன்படுத்துமாறு பல பரிந்துரைகள்.
ஒருமுறை எனது முன்னாள் மாணவி ஒருவர் கணிதம் தொடர்பான கட்டுரையொன்றை என்னிடம் தந்து சரிபார்த்துக் கொடுக்குமாறு கேட்டார். 10 பக்கக் கட்டுரை. முதல் இரு பக்கங்களை வாசித்தபோதே எனக்குத் தலைசுற்றியது. நிறைய தன் முரண்களும் கூறியது கூறலும். இரண்டு பக்க விஷயங்களை இரண்டு பத்திகளில் சுருக்க முடிந்தது. ‘எப்படி தயாரித்தாய்?’ எனக் கேட்டேன். Chat GPT மூலம் தயாரித்ததாகச் சொன்னாள். Chat GPTயின் லட்சணத்தைப் புரிந்துகொள்ள உதவியது அது. இதுபற்றி உடனே எழுதத் துடித்தது மனசு. இப்போது ஏற்க மாட்டார்கள். சற்றுப் பொறுத்து எழுதலாம் என உள்மனம் உணர்த்தியது. சரி ‘உரையாடி’ என்பதைவிட ‘கதையாடி’ என்ற பெயரே பொருத்தமாயிருக்கும்.
ஜே.ஆர்.வி. எட்வர்ட்
நாகர்கோவில்