நாங்குநேரி சாதிய வன்முறை: சமூக உளவியல்களில் வேர்கொண்ட சாதிய முறை
நாங்குநேரியிலிருந்து வள்ளியூர் சென்று ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சின்னத்துரை என்ற பதினோராவது வகுப்பு மாணவரை அதே ஊரைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி வெட்டியிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் வெட்டியவர்கள், அதற்கு உதவியவர்கள் என ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மாணவர்களிடையே ஏற்படும் பிரச்சினைக்காகக் கொலைவரை செல்வது சாதாரணமாக நடந்தேறியிருக்கிறது.
உடன் படிக்கும் மாணவர்கள் சிலரால் தொடர் சீண்டலுக்கு உள்ளாகிவந்த சின்னத்துரை அதனாலேயே பள்ளிக்கு வராமல் போகிறார்.பள்ளியில் அழைத்து விளக்கம் கேட்கும்போது பிரச்சினையைச் சொல்கிறார். பள்ளி நிர்வாகம் அவற்றைக் கடிதமாக எழுதி வாங்கி வைத்துக்கொள்கிறது. அன்று இரவு நாங்குநேரி பெருந்தெருவிலுள்ள தன் வீட்டில் பத்தரை மணிக்குத் தாய், தங்கையோடு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது சின்னத்துரை கடுமையாக வெட்டப்படுகிறார். தடுக்கப்போன தங்கையும் வெட்டப்படுகிறார். அதனைக் கண்ட அவர்களுடைய சின்னத் தாத்தா அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறக்கிறார்.
மீண்டும் மீண்டும் சின்னத்துரையும் அவர் மீதான வன்முறையும்தான் முத