செப்டம்பர் 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வகுப்பறைக்குள் சாதியும் வன்கொடுமையும்
      1990களுக்கு முந்தைய சாதிக் கண்டன எழுத்து
    • கண்ணோட்டம்
      நாங்குநேரி சாதிய வன்முறை: சமூக உளவியல்களில் வேர்கொண்ட சாதிய முறை
    • கதை
      வின் பண்ணணும் சார்...
      உற்சாகம்
      மனக்கோட்டையும் ஏமாற்றமும்
    • அஞ்சலி: புலவர் செ. இராசு (1938-2023)
      அரிய ஆவணப் பதிப்பாளர்
    • அஞ்சலி: கத்தர் (1949-2023)
      சரிந்த சமர்க்களம்
    • வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
      டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர்: பெரியாரைப் போராட அழைத்தவர்
    • விருது
      விருது
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      இரண்டு நூல்கள்
      சூழ்நிலைகளின் சித்திரிப்பு
    • தலையங்கம்-2
      நூல்களை ஒடுக்கும் சக்திகள்
    • தலையங்கம் -1
      மறக்க முடியுமா?
    • கவிதைகள்
      காலை - அறிமுகம்
      இரவுக் காவல்
      மென்மன சைக்கோ- சில செயல்பாடுகள்
    • நேர்காணல்: ராமச்சந்திர குஹா
      “நான் எழுதுவது பொது வாசகர்களுக்காகவே”
    • கு. அழகிரிசாமி நூற்றாண்டு
      கு. அழகிரிசாமியும் பாரதியும்
    • அறிக்கை
      மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் களஆய்வு: சில புரிதல்கள் சில வேண்டுகோள்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2023 கட்டுரை வகுப்பறைக்குள் சாதியும் வன்கொடுமையும்

வகுப்பறைக்குள் சாதியும் வன்கொடுமையும்

கட்டுரை
ஞா. குருசாமி

வகுப்பறைச் சூழல் சமீபகாலமாக வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. குற்றச் செயலில் ஈடுபாடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மாணவர்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்கான, அறியப்பட்ட மனநிலையைச் சரிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் குறைந்துவருகின்றன. சமூகத்தின் அனைத்துக் கிளைகளும் சாதியோடு பிணைந்து அதிலிருந்து விலகி வாழ்வது சாத்தியமற்றதாகிவிட்டது. மாணவர்கள் சரி, தவறு குறித்து யோசிப்பதற்குள் சாதியின் குணாதிசயங்கள் முழுவதும் அவர்களுக்குள் திணிக்கப்பட்டு விடுகின்றன. மாணவர்களிடம் சாதியின் வல்லாண்மையை உறுதிப்படுத்தி, அதை நீட்டித்துக்கொள்வதற்கான களமாக இன்னொரு சாதியைப் பாவிப்பது இயல்பாகவே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கடத்தப்படுகிறது.  பள்ளியின் கழிப்பறைச் சுவர்களில் சாதிப் பெருமிதம் குறித்து எழுதப்படும் வாசகங்கள் மாணவர்களின் சாதிய மனோபாவத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

கலப்பு மண்டலத் தன்மை

திருவிழாக்களைப்போல கல்விப்புலமும் கலப்பு மண்டலத் தன்மையை ஒத்ததாக இருப்பதால் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கல்விப்புலத்திற்குள் வரும் மாணவர்கள் குறுகிய காலத்திற்குள் தத்தம் சாதியை அடையாளம் கண்டு குழுவாக மாறிவிடுகிறார்கள். சாதியை அடையாளம் காண்பதில் கடந்த காலங்களில் இருந்த மெனக்கெடல்கள் இன்று தேவையில்லை. ஒருவரின் ஒரேயொரு வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் கூடப் போதுமானது. இன்றைக்குப் பள்ளிகள் சாதிக்கான குறுங்குழுவின் ஒருங்கிணைப்பாகவும் கல்லூரிகள் பெருங்குழுவின் ஒருங்கிணைப்பாகவும் மாறியிருக்கின்றன. குறிப்பிட்ட நான்கைந்து ஊர்களிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களின் சாதிய வல்லாதிக்க உளவியலின் வளர்ந்த நிலையாக, நான்கைந்து மாவட்டங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்களின் சாதிய வல்லாதிக்க உளவியல் அமைந்திருக்கிறது. இதனால் சாதிய வல்லாதிக்கம் அந்தந்தப் பகுதியில் இயல்பாகப் பராமரிக்கப்படுகிறது. தேர்தல் பெரும்பான்மைக்கு அவசியமானதாகச் சாதிப் பெரும்பான்மையைக் கருதும் அரசியல் கட்சிகளும் வகுப்பறைக்குள் சாதிய வன்கொடுமைகள் நிகழக் காரணமாக இருக்கின்றன. இதன் சமீபத்திய உதாரணம் நாங்குநேரி சின்னத்துரை மீதான தாக்குதல். கடந்த காலங்களில் கல்விப்புலத்திற்குள் நடக்கும் வன்முறைகளைத் தொகுத்துப் பார்த்தோமேயானால் அவற்றில் சரிபாதிக்கு மேல் பட்டியலினத்தார் மீதானவையாக இருப்பதைக் காண முடியும். இதற்குப் பட்டியல் சாதியினர் குறிப்பிட்ட ஊரில் எண்ணிக்கைச் சிறுபான்மையினராக இருக்கிறார்கள் என்று காரணம் சொல்லப்படுகிறது; அது சரியல்ல.

ஓர் ஊரில் எண்ணிக்கைச் சிறுபான்மைச் சாதியாகப் பட்டியலினம் அல்லாத சாதி இருக்குமானால் அதன்மீது ஆதிக்கச் சாதியினர் வன்முறைகளை ஏவுவதில்லை. எண்ணிக்கைச் சிறுபான்மையாகப் பட்டியலினம் இருக்குமானால் வன்கொடுமை ஏவப்படுகிறது. ஆக, ஆதிக்கச் சாதியினரின் இலக்கு எண்ணிக்கைச் சிறுபான்மைச் சாதியல்ல; பட்டியலினம்தான். சான்றிதழ்களை எரித்தல், வீடு - வாகனங்களை உடைத்தல், நிலங்களை அபகரித்தல், ஊனப்படுத்துதல், உளவியல்ரீதியாகப் பலவீனப்படுத்துதல் என்று விதவிதமான ஒடுக்குமுறைகளை எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதிகள் பட்டியலினத்தார்மீது ஏவிக்கொண்டே இருக்கின்றன.

உதாரணமாகச் சிலவற்றைச் சொல்ல முடியும். 2018 ஜூலையில் திருப்பூர், திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாப்பாள் என்பவர் சத்துணவு சமைக்கக் கூடாது என்று அவ்வூரைச் சார்ந்த சில பட்டியலினமல்லாதார் பள்ளியை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் பாப்பாள் இடமாறுதல் செய்யப்பட்டார். தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் தலையிட்ட பின் பாப்பாளின் இடமாறுதல் ரத்து செய்யப்பட்டது. நால்வர் கைது செய்யப்பட்டனர். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.

பட்டியலினப் பெண் சமைக்கக் கூடாது என்று முற்றுகையிட்டவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. இந்த மாதிரியான அப்பட்டமான சாதிய ஆதரவுப் போக்கால்தான் சாதி அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. இதைக் குற்றமாகச் சுட்டி அந்தப் பெற்றோர்கள்மீது ஆள்வோர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. தமது சாதியின் பெருமிதத்துக்காக இன்னொரு சாதிமீது வன்முறையைப் பிரயோகித்தலுக்குத் துணையாகும் போக்கு ஆள்வோர்களிடம் இருப்பதன் வெளிப்பாடாக அதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

2022 அக்டோபரில் தென்காசி அரியநாயகிபுரத்தில் சீனு என்ற மாணவர், ஆசிரியர் ஒருவரின் தொடர்ச்சியான இழிவுபடுத்தலில் தற்கொலை செய்துகொண்டார். வழக்கைப் பதிவு செய்வதற்கே போராட வேண்டியிருந்தது. 2019 அக்டோபரில் அலங்காநல்லூரில் ஒரு மாணவரின் முதுகைச் சக மாணவர்கள் பிளேடால் கிழித்தனர். 2022 செப்டம்பரில் நத்தம் வட்டம் கணவாய்ப்பட்டியில் உள்ள பள்ளியின் தலைமையாசிரியர் மாணவர்களைக் கழிப்பறையைச் சுத்தம் செய்யவைத்தார். 2022 டிசம்பரில் ஈரோடு மாவட்டம் பாலக்கரையில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் இதே குற்றத்திற்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இப்படி பல பள்ளிகளில் பட்டியலின மாணவர்கள் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். உள்ளூர் அளவில் சக மாணவர்களின் முன்னால் கழிவறையைக் கழுவுமாறு நிர்ப்பந்திக்கப்படும் ஒரு மாணவனின் மனநிலையை ஆசிரியர் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை என்பதாகத்தான் இந்தச் செயலை அர்த்தப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்குப் பட்டியலின மாணவர்கள் படிக்க வருவது பட்டியல் இனமல்லாத நபர்களையும் ஆசிரியர்களையும் தொந்தரவுக்குள்ளாக்குகிறது.

இந்திய அளவில் 2019 - 2020 ஆம் ஆண்டுகளில் மட்டும் பட்டியலினத்தாருக்கு எதிரான குற்றங்கள் 9.4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பட்டியலினப் பெண்களும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் 15.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தண்டனை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளதையும் அப்புள்ளிவிவரங்கள் சொல்லியுள்ளன. இதில் ஆறு சதவீத வழக்குகள் பட்டியலின மாணவர்கள்மீது நிகழ்த்தப்பட்டவை.

நிலைமை இப்படியிருக்க நாங்குநேரி சாதிய வன்கொடுமையை ஒட்டி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது விமர்சனத்திற்கு உள்ளானது. அதையொட்டிப் பட்டியலின மக்களின் மீது கருணை காட்டுவதைவிட அவர்கள்மீது கொடுமைகள் இழைப்பவர்களைத் தண்டியுங்கள் என்றும், பட்டியலின மக்களுக்கான நிதியை அவர்களுக்கு மட்டுமே செலவழியுங்கள் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சமூகச் செயல்பாட்டாளர்கள் பலரின் கருத்துகளும் கூடப் பட்டியலினமல்லாதவர்களுக்குச் சாதி பற்றிய தெளிவை உண்டாக்க வேண்டும் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன.

சமூகத்தின் உருமாற்றம்

சர்வ வல்லமையுடன் வியாபித்திருந்த நிலவுடைமை, ஒரு கட்டத்தில் மாறிவந்த சூழலுக்கு ஏற்ப தனது வடிவத்தை மாற்றிக்கொள்ள முனைந்தபோது சமூக அமைப்பில் மிகப்பெரிய மாறுதல் நிகழ்ந்தது. குறிப்பாக, நவீன இந்தியச் சமூக உருமாற்றத்தில் அதன் கூறுகள் அனைத்தும் வேறொரு வடிவத்திற்கு மாறின. அதன் விளைவுகளுள் ஒன்றாகக் கல்விப்புலத்திற்குள் எல்லோரும் முன்னெப்போதைக் காட்டிலும் நுழைந்தார்கள். கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனுடைய தாக்கம் அரசியல், பொருளாதாரங்களில் பிரதிபலித்தது. கற்றல் – கற்றல் வழி பெறப்படும் அனுகூலம் – அதன் வழியாகக் கட்டமைக்கப்படும் நவீன வாழ்க்கை முறை என்னும் சட்டகத்தில் பட்டியலின மக்கள் உட்பட கற்ற அனைவருமே நுழைந்தார்கள். இது எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதிகளுக்கு உவப்பளிக்கவில்லை.

தமிழ்ச் சமூக அமைப்பில் சாதிய ஏற்றத்தாழ்வைப் பராமரிப்பதற்கு முக்கியமான அளவுகோலாக இருந்த நிலவுடைமையைத் தாண்டித் தொழில்முறைமை உருவானபோது சாதிப் பராமரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். காரணம் தொழில்முறைமைக்குத் தேவைப்பட்ட மனிதவளம் பட்டியலினத்தாரிடமும் இருந்தது. நிலவுடைமை அமைப்பில் இருந்ததைப் போன்று பட்டியலினத்தாரை ஒடுக்கியோ புறக்கணித்தோ தொழில்முறைமையால் இயங்க முடியவில்லை. இந்தச் சூழலால் எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதியினர் தமது அதிகாரம் கைநழுவிப் போவதாக எண்ணி வன்முறையைக் கையில் எடுத்தனர். இதனாலேயே அவர்களின் வன்முறைக்கு ஆளானவர்கள் படிக்கக் கூடிய பட்டியல் சாதி மாணவர்களாக இருந்தார்கள். வகுப்பறைக்குள் சாதியின் பெயரிலான வன்முறை அதிகமாகியது. படித்துக்கொண்டிருப்பவர்களைக் காலி செய்வதால் தொழில்முறைச் சமூகத்தில் போட்டியின்மையை அல்லது பட்டியலினமின்மையை உருவாக்க முடியும் என்று எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதியினர் நம்பியதன் வெளிப்பாடாக அத்தகைய வன்முறைகளைப் புரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.

இதை மிக எளிதாகச் சரிசெய்துவிட முடியும். சட்டத்தின்படி நேர்மையான முறையில் சாதியப் பிரச்சினைகள் பார்க்கப்படுமானால் குறுகிய காலத்திற்குள் இணக்கமான சூழலை உருவாக்கலாம். ஆள்வோர் பல நேரங்களில் எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதியினரின் முகமாக இருப்பதால் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுக்குப் பட்டியலினத்தாரின் வாக்குவங்கி இருந்தபோதும் ஆள்வோர் பட்டியலினத்தாரைப் பாரபட்சமாகவே பார்க்கிறார்கள்.

ஆள்வோர்கள், எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதிகளின் திரட்சியாக இருப்பதாலேயே பட்டியலினத்தாரின் மீதான கொடுமைகள் எந்தவிதக் குற்ற உணர்வுமின்றி நிகழ்த்தப்படுகின்றன. பட்டியலினத்தார் அரசியல், சமூக அதிகாரத்தில் பங்கு கேட்டுவிடாமல், நலிவடைந்து கிடப்பதற்கான அனைத்து வேலைகளையும் ஆள்வோரே செய்கிறார்கள். இந்த நிலை தொடருமானால் ஆள்வோரே பட்டியலினத்தார்மீது வன்கொடுமையை நிகழ்த்துகிறார்கள் என்கிற அவப்பெயர் உருவாகும். அதை ஆள்வோர் மனங்கொள்வார்களேயானால் மட்டுமே சமூகம் அமைதியடையும்; கல்விப்புலம் சீர்மை பெறும்.

நீலம் பண்பாட்டு அமைப்பின் ‘வேர்ச்சொல்’ நிகழ்வில் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட கட்டுரை வடிவம்.

              மின்னஞ்சல்: jeyaseelanphd@yahoo.in

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.