“நான் எழுதுவது பொது வாசகர்களுக்காகவே”
courtesy: livemint.com
இந்தியாவில் அதிகம் வாசிக்கப்படும், அதிகம் விரும்பப்படும், அதிகம் தூற்றப்படும் எழுத்தாளர் என்று ராமச்சந்திர குஹாவை அழைக்க முடியும். இரு பாகங்களில் விரியும் ‘காந்தியின் வாழ்க்கை வரலாறு’, ‘சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் நவீன வரலாறு’ (India After Gandhi, 2007), ‘கிரிக்கெட்டின் சமூக வரலாறு’ (A Corner of a Foreign Field, 2002) போன்ற, கொண்டாடப்படும் பல நூல்களின் ஆசிரியர். சிப்கோ இயக்கத்தின் சமூக வரலாற்றை விவரிக்கும் இவருடைய முதல் நூல் (The Unquiet Woods: Ecological Change and Peasant Resistance in the Himalaya, 1989) இன்றுவரை அத்துறையில் செல்வாக்குச் செலுத்தி வருகிறது.<b