எழுதாத எழுத்துகள்
“நான் மொழிபெயர்த்துள்ள மற்ற கதைகள் வேறொரு தொகுதியாக வெளிவரும். அதில் ஜெர்மனி, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, போர்ச்சுக்கல், பிரேசில், பாரசீகம், பல்கேரியா, ருமேனியா முதலிய நாடுகளின் கதைகளும் பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா முதலிய நாடுகளின் வேறு சில சிறந்த சிருஷ்டிகளும் இடம்பெறும் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ‘பல நாட்டுக் கதைகள்’ என்ற தன் நூலின் முன்னுரையில் கு. அழகிரிசாமி எழுதினார் ( 21. 12. 1961). இக்குறிப்பை எழுதிய பிறகு ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தார் கு. அழகிரிசாமி. ஆனால் அதற்குள் அவர் குறிப்பிட்ட அந்த ‘வேறொரு தொகுதி’ வெளிவரவே இல்லை.
எனவே பல நாட்டுக் கதைகள் என்ற ஒரு நூல் மட்டுமே கு. அழகிரிசாமியின் மொழிபெயர்ப்புக் கதைத் தொகுதியாக எஞ்சிவிட்டது.
ஏமாந்தவள் (நாவல்), புதிய வாழ்க்கை (நாவல்), கண்ணனும் கானமும் (கட்டுரைகள்), கருப்பு கன்னி (கவிதைகள்), குட்டிக்கதைகள், உலகக் கதைகள் என்னும் பெயர் சூட்டப்பட்ட அவர் எழுத்துகள் அடங்கிய கு. அழகிரிசாமியின் பன்னூல் பட்டியல் ஒன்று கிடைக்கிறது. கு. அழகிரிசாமி கதைகள் (