பொ. வேல்சாமிக்கு விளக்கு விருது
ஆய்வாளரும் எழுத்தாளருமான அறிஞர் பொ. வேல்சாமிக்கு இவ்வாண்டுக்கான புதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விப்புலத்துக்கு அப்பால் நுண்ணோக்கும் கூர்மதியும் வெளிப்படும் ஆய்வுகளை மேற்கொண்டவர் பொ. வேல்சாமி. தமிழ்ப் பண்பாட்டையும் இலக்கியத்தையும் அறிவியல் பார்வையில் மதிப்பிட்டவர். தரவுகளின் உண்மையை முன்னிருத்தி இடையறாது செயற்பட்டவர். பொய்யும் வழுவுமற்ற ஆய்வு நூல்களைப் புனைவுக்குரிய சுவையுடன் உருவாக்கியவர்.
காலச்சுவடு வெளியிட்ட பொ.வேல்சாமியின் நூல்கள்:
1. பொய்யும் வழுவும்
2. கோவில் – நிலம் – சாதி
3. பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
விருதாளருக்குக் காலச்சுவடு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.