இலக்கியமும் சினிமாவும் இணைந்த படைப்புகளைத் தர வேண்டுமென்பது என் கனவு
1990களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியதுமே பலரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜே.பி. சாணக்யா. புதிய கதைக்களங்கள், தனித்துவமான கதையாடல்கள், வியக்கவைக்கும் கதைமாந்தர்கள், அகமும் புறமும் முயங்கியபடி பயணிக்கும் கதைப்போக்கு, புகைப்படம்போன்ற காட்சிச் சித்திரிப்புகள், விரிவான பின்புல விவரணைகள் முதலான கூறுகளைக் கொண்ட சாணக்யாவின் எழுத்து சமகாலத் தமிழ்ப் படைப்புச் சூழலில் தனித்து நிற்கிறது. அழுத்தமும் அடர்த்தியும் அடுக்குகளும் கொண்ட கதையுலகை உருவாக்கும் சாணக்யாவின் கனவு தமிழ் இலக்கியத்தையும் தமிழ்த் திரையுலகையும் கலாபூர்வமாக இணைப்பது. சிறிய வயதிலேயே திரைப்படம்மீது உருவான பேராவலை அடியொற்றித் திரைத் துறையிலேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட சாணக்யா பல்வேறு திரைப்படங்களில் பணிபுரிந்திருக்கிறார். 27 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளராக அடையாளம் காணப்பட்ட சாணக்யா, தற்போது 50 வயது நிறைவடையும் தருணத்தில் பழுத்த மரமாகக் காட்சியளிக்கிறார். இலக்கியம், திரைப்படங்கள், ஆன்மிகம் ஆகிய பாதைகளில் மேற்கொண்ட பயணங்கள் இவரைப் பக்குவமான ஆளுமையாக மாற்றியிருப்பதை அவருடன் பேசும்போ