ராணிகள்
ஓவியம்: டிராட்ஸ்கி மருது
1. தளவாய்
மதுரையை ஆளும் சொக்கநாத நாயக்கரின் மனைவி ராணி மங்கம்மாளும் மாதங்கியும் தனித்து இருந்தார்கள்.
“திருமலை மகாராஜாவிற்கு இருநூற்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவருக்கே அனைவரும் நினைவில் இருக்காது. பட்டத்து ராணி தெரிந்திருக்கும். பிரியத்திற்குரிய சிலரைத் தெரிந்திருக்கும். மனைவிகளைப் படுக்கையறைக்கு அழைப்பது மனைவிகளின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. நான் மனைவியாக, அரசியாக இருக்கிறேன். தஞ்சாவூர் நாயக்க மன்னர் விஜயராகவனின் மகளைப் பெண் கேட்டு நமது மன்னர் அனுப்பிய தூதரை தஞ்சாவூர் நாயக்கர் அவமதித்து நமது மன்னரின் கோரிக்கையையும் மறுத்துவிட்டார். இப்போது இவர் போ