அருப்புக்கோட்டையிலிருந்து திருமேனிநாதன்
வைக்கம் போராட்டத்திற்குத் தமிழ் நாட்டிலிருந்து பெரியார் போன்ற தலைவர்கள் மட்டுமல்ல தொண்டர்களும் பலர் சென்றனர். அவர்கள் தலைவர்களின் குறிப்பான அழைப்பின் பேரில், பொதுவான வேண்டுகோளின் பேரில், தன்னெழுச்சியாக... எனப் பலவேறு வழிகளில் சென்றிருக்கலாம்.
கோவையிலிருந்து எஸ்.ஏ. கணேசன் பெரியாரின் வேண்டுகோளின்படிச் சென்றவர் என்று தெரிகிறது. நாகர்கோயிலிலிருந்து சென்ற தொண்டர்கள், அவ்வூர்த் தலைவர் எம்பெருமாள் நாயுடுவின் ஆதரவுடன் சென்றிருக்கலாம்.
“நாகர்கோயிலிலிருந்து காங்கிரஸ் செயலாளர் சிவதாணு பிள்ளை ரூ. 350 யுடனும், கோட்டாறு ஈழவ சகோதரர்களுடன் வைக்கத்துக்குப் புறப்பட்டார்.பற்பல தேதிகளில் நாகர்கோயில் காங்கிரஸ் கமிட்டியார் மூன்று தடவைகளில் மொத்தம் 11 தொண்டர்களை வைக்கத்துக்கு அனுப்பினார்கள்” (சுதேசமித்திரன்,18 ஏப்ரல் 1924) என்றொரு தகவல் கிடைக்கிறது. அதைப்போலவே சேலம் டாக்டர் பி. வரதராஜுலுவின் வேண்டுகோளை ஏற்றும் பலர் சென்றிருக்கலாம்.
காங்கிரசிடம் கேட்டும் பணம் தராததால் சென்னைத் தொண்டர்களான வி.என். ஐயங்கார், கந்தசாமி ராஜு ஆகியோர் கால்நடையாகவே வைக்கம் செ