மோடியின் வெற்றி! பாஜகவின் தோல்வி?
2024 பொதுத் தேர்தல் பல வழிகளிலும் 1977 பொதுத் தேர்தலுக்கு நிகரானது. நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு மார்ச் 3ஆம் வாரத்தில் நடத்தப்பட்ட 1977 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது மட்டுமல்ல, இந்திரா காந்தி தனது கோட்டையான ரேபரேலியிலும் அவரது மகன் சஞ்சய் காந்தி அமேதியிலும் படுதோல்வியடைந்தனர். 1971இல் பெற்றதை விட (352 இடங்கள்) சுமார் 200 இடங்கள் குறைவாக, 154 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றது. 1977இல் வட இந்தியாவில் மகத்தான தோல்வியைச் சந்தித்த காங்கிரசை அப்போது காப்பாற்றியது தென்னிந்தியா, குறிப்பாகத் தமிழ்நாடு. அன்று இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சி பெற்ற மாபெரும் தோல்வியுடன் ஒப்பிடுகிறபோது இன்று நரேந்திர மோடியின் சர்வாதிகார ஆட்சி பெற்றுள்ள தோல்வி ஒரு சிறு சறுக்கல் மட்டுமே (2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 2024இல் பாஜகவின் வாக்கு வங்கியில் சிறு சதவீதம் மட்டுமே குறைந்திருக்கிறது). ஆனால் மோடியின் அளவற்ற பண பலம், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் (எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையிலடைப்பது, எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்குகளை முடக்குவது போன்