சாய்மணக் கதிரையிலிருந்து பார்த்தவையும் படித்தவையும்
ஓவியம்: மு. மகேஷ்
சிறுமி நஸ் ரீன்
காட்சி தந்து ஆட்சி செய்த காணொளி
நான் பலவீனப்பட்டுப் போயிருந்த ஒரு நேரத்தில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சி நான் புழங்கும் வட்டாரங்களில், கல்விசார் சொற்களில், பொழுதுபோக்குப் பாலியல் (Entertainment Porn) என்று வகைப்படுத்தப்பட்டு அலட்சியமாகப் புறக்கணிக்கப்படக்கூடியது. நான் பார்த்த காணொளியில் சிறுமி ஒருத்தி பாடினார். அவர் பாடியது பக்