காலச்சுவடும் கறுப்பிலக்கிய மொழிபெயர்ப்புகளும்
ஊ. முத்துபாண்டி
அமெரிக்காவில் ஆப்ரோ - அமெரிக்கர்கள் பிப்ரவரி மாதத்தைக் கறுப்பின வரலாற்று மாதமாக நினைவுகூர்ந்து வருகிறார்கள். குறிப்பாக, கறுப்பின வரலாற்று மாதத்தின் தாக்கமாக இந்தியாவில் தலித் ஆளுமைகளால் பாபா சாஹேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தைத் தலித் வரலாற்று மாதமாகக் கொண்டாடுகிறார்கள். கறுப்பின இலக்கியம் தலித் இலக்கியங்கள்மீது செலுத்திய தாக்கம்பற்றி ஆய்வுசெய்துவரும் நான் தமிழகத்தில் இவ்விரண்டையும் ஒப்பீடு செய்யும்போது, தமிழில் கறுப்பினப் படைப்புகள் எப்படி வெளியாகியிருக்கிறது, பதிப்பிக்கப்பட்டிருக்கிறது, மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது எனத் தேட ஆரம்பித்தேன். அதற்காக நிறப்பிரிகை, கோடாங்கி, கல்குதிரை, சுபமங்களா, பிரவாதம் போன்ற இதழ்களை அதிகம் கையாண்டேன். ஆனால் இந்தத் தளத்தில் <