கல்விப்புல ஆய்வுகள்: எதார்த்தமும் எதிர்பார்ப்பும்
கல்விப்புல ஆய்வுகளில் ‘சுயமாக எழுதாமை’ முன்னெப்போதையும் விட இன்றைக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனாலேயும் அதன்மீது பலருக்கு ஒவ்வாமை உண்டு. கல்விப்புல ஆய்வுகளின் தொடக்கக் காலகட்டத்தில் தொகுத்துக் காட்டல், விளக்கிச் சொல்லுதல், மேற்கோள்களால் நிரப்புதல் என்பன பொதுப் பண்புகளாக இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலம் முதற்கொண்டு ஐரோப்பிய நவீன பார்வையில் உண்டான ஆய்வுச் சட்டகத்தின் வழியிலான கலை, இலக்கியம், மொழி குறித்த ஆய்வுகள், தரவுகளும் முன்னாய்வுகளும் இல்லாத நிலையில் அப்படித்தான் இருந்திருக்க முடியும். இன்று பல்வேறு வகைமைகள், பார்வைகள்சார்ந்து காத்திரமான ஆய்வுச் சூழல் உருவாகிவிட்ட பின்பும் தொகுத்து விளக்கச் சொல்லிப் பக்கங்களை நிரப்பிப் பட்டம் பெறும் நிலை மாறவில்லை. ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். சரி, முனைவர் ஆன பிறகாவது சமகால ஆய்வின் செல்திசைகளை உணர்ந்து தம்மை மேம்படுத்திக்கொள்கிறார்களா என்றால் அதுவும் மிகக் குறைவு. அப்படிப்பட்டவர்கள் நெறியாளராகித் தம்மிடம் வரும் ஆய்வாளருக்கு ஆய்வுத் தலைப்பை முடிவு செய்வதே தனிக் ‘