தமிழகத்தின் இரும்புக் காலம்
‘இரும்பின் தமிழக விசேஷங்கள்’ என்ற தலைப்பில் மாத்ருபூமி வார இதழ் (23 பிப்ரவரி 2025) வெளியிட்ட நீண்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் இது.
கட்டுரையாளர் பி.எஸ். நவாஸ்: வரலாறு, மானுடவியல் துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். கேரள அரசின் வருவாய்த் துறையில் பணிபுரிகிறார். மஞ்சேரியில் வசிக்கிறார்.
- தமிழில்: என்னெஸ்
பண்டைய தமிழக வரலாற்றை உலக வரலாற்றின் ஆரம்ப அத்தியாயங்களுக்கு இட்டுச் செல்லும் கண்டுபிடிப்புகளை கொண்ட ‘இரும்பின் தொன்மை’ - தமிழ்நாட்டில் அண்மைக்கால கதிரியக்கக் காலக்கணக்கீடுகள் என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘தமிழ் மண்ணில்தான் இரும்பு யுகம் தொடங்கியது’ என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தபோது கல்விப்புலம் எந்த வியப்புமின்றி அதை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், பல ஆண்டுகளாக இதுபோன்ற செய்தியை ந