சாதிக் குப்பையில் அலைந்தலைந்து அழிதல் அழகல்லவே!
வரைகலை: மு. மகேஷ்
நாடு சுதந்திரம் பெற்று இத்தனைக் காலம் கடந்த பிறகும், சீர்திருத்தவாதிகளின் பல முயற்சிகளுக்குப் பிறகும் ஒடுக்கப்படும் மக்கள்மீதான சாதி, மத வன்முறையில் எந்த மாற்றமும் நிகழவில்லை; அல்லது எதிர்பார்த்த அளவுக்கான மாற்றம் ஏற்படவில்லை; இதை நாம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, இன்றைக்குப் புண்ணாகிச் சீழ் கட்டியிருக்கும் பல விஷயங்களைச் சரி செய்வது குறித்துச் சிந்திக்க இயலும். ஆனால் நம் சமூக, அரசியல் அமைப்புகள் அத்தகைய முயற்சிகளை முன்னெடுக்காததுடன் அதன் மேல் பட்டுத்துணி போர்த்திச் சரிகை சுற்ற முயல்வதை ஏமாற்றுத்தனம் என்றுதானே சொல்ல முடியும்?
இதுவரையிலும் இங்கு நிகழ்ந்திருக்கும் மீச்சிறு மாற்றங்களைப் பெரிதாகப் பெருக்கிக்கொண்டு, அதையே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராகத்தில் பன்னெடுங்காலம் பாடி