இரும்பின் தொன்மை: அரசியல் குழியில் அகழாய்வு
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை இந்த ஆண்டு ‘இரும்பின் தொன்மை – தமிழ் நாட்டில் அண்மைக்கால கதிரியக்கக் கணக்கீடுகள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. அகழாய்வு ஆராய்ச்சிப் பதிவுகள் அடங்கிய புத்தகம் அமைச்சர்களின் ஆசி பெற்று வெளிவந்திருக்கிறது. சில அகழாய்வாளர்களும் பட்டும் படாமலும் புத்தகத்திற்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆரியர்கள் வரவு என்பதே பொய், அவர்கள் இந்தியாவிலேயே இருந்தவர்கள் என்ற முன்முடிவை நிறுவ வடஇந்தியாவில் நடத்தப்படும் விந்தை நிகழ்வுகளுக்கு ஈடாகத் தமிழகத்திலும் நடைபெறுகிறது. இங்கு தமிழர்கள் உலக நாகரிகத்தின், இந்திய நாகரிகத்தின் முன்னோடிகளில் முதல்வர்கள் என்ற முன்முடிவை நிறுவ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தும் செய்யப்படுகின்றன.
இரும்புக் காலம் என்றால் என்ன?
‘இரும்பின் தொன்மை’ என்ற தலைப்பு சரியானதாகத் தோன்றவில்லை. இரும்பு 150 கோடி ஆண்டுகள் தொன்மை யானது. பூமிய