காந்தி புன்னகைக்கிறார்
ஓவியம்: மணிவண்ணன்
இரவு முழுவதும் அவன் தூங்காமல் இருந்தான். இவ்வளவு நீண்ட இரவைத் தன் வாழ்நாளில் முன்னெப்போதும் உணர்ந்ததேயில்லை. நினைவுகளின் வாள் முனைகள் கருணையின்றி அவனைக் குத்திக் கிழித்துக்கொண்டிருந்தன. மணற் தூசுகள் பொடிப்பொடியாய் உதிர்ந்துகொண்டிருக்கும் அந்தப் பழைய விட்டத்தை இடைவெளியில்லாமல் அவனது கண்கள் அளந்துவிட்டிருந்தன. மொடமொடப்பான பாயில் அவனது கரங்கள் பரவி எதையோ தேட முற்படுவதைப் போல பாவனைசெய்துகொண்டிருந்தன. இரவு முடிந்துவிட்டதை அவன் அறிந்திருந்தான். உள்ளம் எழுப்பிய முட் குறிகளின் நகர்வில் தன் எஞ்சிய வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் சிறு அசைவுகளாக அவன் உணரத் தொடங்கியிருந்தான். தொலைவிலிருந்து வந்து கொண்டிருந்த பூட்ஸ்களின் கரைச்சல் அங்கிருந்த நிசப்தத்தில் கல்லெறிந்து நகைத்தது. தன