உணவு போலிச் செய்திகளும் அரசியலும்
‘போலிச் செய்தி’ என்ற கருத்தாக்கம் 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் காலத்தில் முக்கியக் கருத்தாக உருவெடுத்தது. இக்கருத்தாக்கம் மிகவும் அண்மைக் காலத்தியது. ஆகவே இதுகுறித்த புரிதலும் தொடக்க நிலையில்தான் உள்ளது. ‘போலிச் செய்தி’ உண்மைச் செய்தியைப் போன்று தோன்றுவது. ஆனால் உறுதிசெய்யப்படாத, உண்மைத் தகவலை அடிப்படையாகக் கொண்டிராத, அச்சு வடிவம்முதல் டிஜிட்டல் வடிவம்வரை பரந்துபட்டிருக்கும் செய்தியாகும். போலிச் செய்திகளை ஊட்டி வளர்க்கும் பண்ணைகளாகச் சமூக ஊடக வலைதளங்கள் விளங்குகின்றன. போலிச் செய்தியானது காலம்காலமாக இருந்து வரும் ஒன்றுதான் என்றாலும் இன்று சமூக வலைதளங்களின் வாமன வளர்ச்சியின் காரணமாக அவற்றின் பரவல் மிக அதிகமாகவும் விரைவாகவும் இருக்கிறது. பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை தங்களின் வடிவமைப்பு (Design), நெறிமுறையின் (Algorithm) மூலம் போலிச் செய்திப் பரவலுக்குப் பெரிதும் துணை புரிகின்றன. இந்தியாவில் பரவும் போலிச் செய்திகள் சிறுபான்மையினரையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் குறிவைத்து, அவர்களைப்