பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
ஓவியம்: பிக்காசோ
நின்று யோசிக்கும் நதி
தன்னைத்தானே கடலாக்கிக்கொள்ளும் நதியை
யாரால் தடுத்து நிறுத்தமுடியும்...? என்றான்
நான் அருகே சென்று நீரள்ளி
“இதோ நிறுத்திவிட்டேன் பார்” என்றேன்
இதிலென்ன அதிசயம் என்ற தோரணையில்
அங்கு வந்த கழுதையொன்று
தன் பங்கிற்கு வாய்வைத்து நீரருந்தி
அதே நதியைத் தன்னுள் நிறுத்திக் காண்பித்தது.
பிறகு தன்போக்கில் தொடர்ந்தது மிச்சமிருந்த பயணத்தை.
முன்பொருமுறை கடவுளைச் சுமந்துபோன
அதே கழுதைதான்
இப்போது நதியையும் சுமந்துபோகிறது
பயன்பாடற்றவொரு பாலத்தின் கீழே
ஆறுதலாய்
மேலும் அதுவும் இப்போது ஒரு ஆறு <br