மாயப் பின்னல்
ஓவியம்: பி.ஆர். ராஜன்
காரின் டயர் தரையில் உராய்ந்து கிளம்பிய புழுதிப் படலம் இரு பக்கங்களிலும் பிரபஞ்ச வெடிப்பின் அண்ட கோளங்களைத் தோற்றுவித்தபடி வந்துகொண்டிருந்தது. பறந்தால் தூசு; விழுந்தால் மணல்; அளந்தால் துகள்; அபத்தமாக ஏதேதோ எண்ணங்கள் கொத்தாகப் பறக்கும் பழப்பூச்சிகளைப் போல் தலைக்குள் மொய்த்தன.
இதற்கு மேல் கார் போகாது என்று டிரைவர் சொன்னதும் அம்மா என்னைத் திரும்பிப் பார்த்தாள். எனக்கு அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தது. சரி இறங்கி நடக்கலாம் என்றேன். அவளுடைய திருப்திக்காக மட்டுமே இங்கெல்லாம் திரிந்துகொண்டிருக்கிறேன். ஒரு பக்கம் குவாண்டம் பௌதிகத்தில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டு இப்படிச் சுற்றிக்கொண்டிருப்பதை நினைத்தால் எனக்கே என்மீது வெட்கமாக இருந்தது. அம்மாவுக்காக என்று சமாதானப்