கவிதையின் பாட்டும் பாட்டின் கவிதையும்
“சினிமாவிற்குப் பாட்டெழுதும் விருப்பம் உங்களுக்கு உள்ளதா?” இந்தக் கேள்வியைச் சில சமயங்களில் எதிர்கொண்டிருக்கிறேன். “உள்ளது” என்பதுதான் பதில். முழுநேரப் பாடலாசிரியராக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையில்லை. ஆனால் என் சொல், பியானோவோடு கூடி முயங்கும் இன்பத்தைக் காணும் ஆவல் உள்ளது. சொல்லொன்று பாட்டாக மாறித் துள்ளும் தருணத்தின் பரிதவிப்பை அள்ளிப் பருகும் வேட்கை உள்ளது. இதில் குற்றம் ஏதுமிருப்பதாக நான் எண்ணவில்லை. எவ்வளவு முரட்டுத்தனத்துடன் ‘இசை’ என்று எனக்கு நானே பெயர் சூட்டிக்கொண்டேனோ, அந்த முட்டாள்தனத்தின் சுகம் இன்னும் நெஞ்சு நிறைய இருந்துகொண்டுதான் இருக்கிறது. உங்களால் கவிதையையும் பாட்டையும் தெளிவாகக் காண முடிமெனில் நீங்கள் இரண்டையும் குழப்பிக்கொள்ள அவசியமிருக்காது. மேல் கீழ் என்றல்ல, தனித்தனி என்றே சினிமாப் பாடலையும் கவிதையையும் புரிந்துவைத்துள்ளேன்.
திரையிசைப் பாடல்கள் எங்கும் நிறைந்துள்ளன. அதுகுறித்து இங்கு நாள் தவறாது பேசப்படுகிறது. “பழைய பாடல்களா? புதிய பாடல்களா,” என்று தொடங்கிய ஒரு பட