வேங்கை வயல் அறம் பிறழ்ந்த நீதி
‘நீதிமன்றங்களில் வழங்கப்படுவது தீர்ப்புத்தானே ஒழிய நீதி அல்ல,’ என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு. வேங்கை வயல் தலித் குடியிருப்புப் பகுதியின் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டாண்டுகளுக்கு மேல் இழுத்தடிக்கப்பட்டு வந்த விசாரணை தமிழ்நாடு அரசால் முடிவுக்குக் கொணரப்பட்டிருக்கிறது.
இதுநாள் வரையில் முடிக்கப்படாமல் இருந்த விசாரணை தந்த துயரத்தைவிட இந்த முடிவு தந்திருக்கும் துயரம் பயங்கரமானது. அதாவது இப்பிரச்சினை குறித்த இறுதி விசாரணை அறிக்கையைத் தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி காவல்துறைப் பிரிவு 20.01.2025 ஆம் நாள் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. குற்றம் செய்தவர்கள் பாதிக்கப்பட்ட தலித் மக்களில் சிலரே என்கிற ‘முடிவை’அந்த அறிக்கையில் அது தெரிவித்துள்ளது. கழிவு கலக்கப்பட்ட ஆதாரத்தை