அகதிகள் ஏன் நாடு திரும்ப வேண்டும்?
தமிழ்நாட்டு அகதி முகாம்வாசி ஒருவர் இலங்கை திரும்ப விரும்புகிறார் என்றால் அவர் தனது விருப்பத்தை மறுவாழ்வுத்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதிலிருந்து அவர் உள்ளூர்க் காவல் நிலையம், கியூபிரிவு அதிகாரிகள், தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அயல்நாட்டவர் பதிவு அலுவலகம் ஆகியவற்றை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வர வேண்டும். அதற்குள் அவர் கடவுச்சீட்டையும் விண்ணப்பித்துப் பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறைகளை முடிப்பதற்கு ஒரு வருடம்கூட ஆகலாம்; எனக்குப் பத்து மாதங்கள் ஆயின.
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு அந்த நபர் பிறந்து ஆறு மாதங்களுக்குள் பதிவுசெய்யப்பட்ட இலங்கைப் பிறப்புச் சான்றிதழின் அசல் பிரதி முக்கியமானது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அகதிகளிடம் இலங்கைப் பிறப்புச் சான்றிதழ் மட்டுமல்ல, ஏனைய ஆவணங்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் சுமார் ஒரு மாத காலத்தில், ஒரு வருடம் மட்டுமே செல்லுபடியாகும் இலங்கைக் கடவுச்சீட்டு அவருக்குக் கிடைக்கும். முன்பு இலங்கைக்கு மட்டும் செல்வதற்கான கடவுச்ச