ஜன்னல்கள் மூலம் விரியும் உலகம்
ஜன்னல்கள் மூலம் விரியும் உலகம்
சுடர்விழி

சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பயின்ற அல்லது பணியாற்றிய ஆளுமைகள் குறித்த தேடலும் வாசிப்பும் எப்போதுமே எனக்கு உவப்பான ஒன்று. ராஜமய்யர், அ.மாதவையா போன்ற தமிழின் முன்னோடிப் புனைகதையாளர்கள் பயின்ற மண்ணில், அம்மரபின் தொடர்ச்சியாய், பெண்ணிய நோக்கிலான சிந்தனைகளைத் தன் படைப்பின் வழி முன்னெடுத்த எழுத்தாளராக நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் அம்பையின் கதைகள் மீதான அறிமுகமும் அதற்குப் பின்னான ஈர்ப்பும் எனக்கு அப்படி உருவானதுதான்.
“வாழ்க்கையில் உண்மையான அனுபவத்தைப் பெறணும்னா வீட்டை விட்டு வெளியே வரணும்.” பாட்டி, அப
