என்னை நட்சத்திரம் என்று அழைப்பார்கள்
என்னை நட்சத்திரம் என்று அழைப்பார்கள்
எஸ். ஆனந்த்

சிட்னி பாட்டியே, சிறந்த அமெரிக்க நடிகர்களுள் ஒருவர். வெள்ளையர் ஆதிக்கம் மிகுந்த அமெரிக்கத் திரையுலகில் சுய திறமையினாலும் அயராத உழைப்பாலும் உயர்ந்த இடத்தை அடைந்தவர். கறுப்பின நடிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். தீர்க்கமான பார்வையும் மென்மையான பேச்சும் நெடிதுயர்ந்த உருவமும் கொண்டு நேர்த்தியாக உடையணிந்து கனவானுக்குரிய மிடுக்குடன் அனைவரையும் கவர்ந்தவர். கறுப்பின நடிகர்களில் அவர் அளவு அனைவரின் மரியாதையையும் மதிப்பையும் பெற்றவர் எவரும் இல்லை.
சிட்னி பா
