பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்கும் குரல்
பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்கும் குரல்
மருதன்
பண்பாடும் கோட்பாடும்
சமூகவியல், அரசியல், கலை, வரலாறு, கோட்பாடு என்று ஸ்டாலின் ராஜாங்கத்தின் பங்களிப்புகள் பல்வேறு துறைகளில் விரிந்து சென்றாலும் அடிப்படையில் அவர் ஒரு பண்பாட்டு ஆய்வாளர். ஒரு திரைப்படம் குறித்து எழுதினாலும், சமகால அரசியல் செயல்பாட்டையோ அல்லது சமூக நிகழ்வையோ அலசினாலும் பண்பாட்டின் ஒரு கூறாகவே அவர் புரிந்துகொள்கிறார்; அவ்வாறு அணுகியே ஆராய்கிறார்.
பண்பாடு என்பதன் பொருள் என்ன? அதை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? எந்தக் கோட்பா