வாழ்க்கையை மேம்படுத்தும் கலை
சஞ்சய் சுப்ரமணியனின் விரிவான நேர்காணல் காலச்சுவடு 80ஆவது இதழில் (ஆகஸ்ட் 2006) பிரஸன்னா ராமஸ்வாமியின் முன்னெடுப்பில் வெளிவந்தது. நேர்கண்டோர் பிரஸன்ன ராமஸ்வாமி, யுவன் சந்திரசேகர், வி. ரமணி, வி.கே. ஸ்ரீராம் ஆகியோர். கர்னாடக இசை ரசிகர்கள் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தரப்பைத் தாண்டி இலக்கியவாதிகள், வாசகர்கள் என்ற மற்றொரு தரப்புக்கு அவரை இந்த நேர்காணல் கொண்டுசென்றது.
2005ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய இதழான காலச்சுவடில் எனது விரிவான நேர்காணல் வெளிவந்தது. மனதுக்கு உற்சாகம் தரும் ஒரு சூழலுக்குள் வந்து விட்டதாக நான் உணர்ந்தேன். இந்த நேர்காணலையும் பிரசன்னா தான் நடத்தினார். கூடவே ஆவணப்பட இயக்குநர் ஆர்.வி. ரமணியும், எழுத்தாளர் யுவன் சந்திரசேகரும் (தமிழ் இலக்கியம் பற்றி இவரோடு உரையாடுவதில் எனக்குப் பெரு விருப்பம் உண்டு) இருந்தார்கள். பதினைந்து மணி நேரம் நீண்ட இந்த நேர்காணலில் எனது இசைப்பயணம் பற்றிய தீவிரமான தேடல் வெளிப்பட்டிருந்தது (சஞ்சய் சுப்ரமணியனின் ‘ஆன் தட் நோட்’ - பக்கம் 44).
சரியாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இதழில்