தமிழின் தாயும் சேயும்
மொழிகளுக்கு இடையே உள்ள உறவை மனிதக் குடும்பங்களுக்கிடையே உள்ள உறவாக உருவகிப்பது ஒரு வழக்காறு. அதனாலேயே இந்த மொழிகளின் குடும்பம் எது, ஒரு மொழியின் தாய் எது, சேய் எது என்ற கேள்விகள் எழுகின்றன. ஒரு குடும்ப உறுப்பினர்களின் பௌதீக உறவை அவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கும் மரபணுக்கள் காட்டுகின்றன. பெற்றோரும் அவர்கள் பெறும் பிள்ளைகளும் பகிர்ந்துகொள்ளும் மரபணுக்கள் 99 சதவிகிதம். பிள்ளைகளின் மரபணுக்கள் பெற்றோரின் கையளிப்பு. (inheritance). ஆனால் மொழியின் உறவில் தந்தையின் உறவுக்கு - பிற மொழித் தொடர்பால் வரும் புதிய சேர்க்கைகளுக்கு - இடம் இல்லை. மேலும் மொழியில் தாய்க்கும் சேய்க்கும் பொதுவாக இருக்கும் ஒலிகளும் உருபுகளும் சொற்களும் கையளிப்பு என்று சொல்ல முடியாது. அவை மொழி மாறும்போது மாறிய மொழியில் தக்கவைத்துக்கொண்ட கூறுகள் (retention); மாறிய மொழியில் தாமே புதியனவாக ஆக்கிக்கொண்ட கூறுகளும் (innovation) உண்டு. இ