தமிழிலிருந்து பிறந்ததா கன்னடம்?
மொழி, மனித நாகரிகத்தின் முதலாவது கண்டுபிடிப்பு; இதன் தோற்றம் இன்று வரை புரியாத புதிர்; இது சமூகச் செயலாற்றலுக்கான கருத்துப்புலப்படுத்த ஒழுங்கமைவுடையது; அறிவாதார முறையியலின் மூல முதற்பொருள்; பன்மொழியச் சூழமைவில் ஒற்றுமையை அரண்செய்யும் ஒருங்கிணைப்பு சக்தி; மனித சமூகத்தின் இன, பண்பாட்டு அடையாளங்களுக்கு நிகரான மற்றுமொரு அடையாளம்; மனிதவள மேம்பாட்டிற்கான ஆதார சுருதி: எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லாக் காலத்திலும் மொழி அரசியலின் முக்கியமான விவாதப் பொருள் மொழி.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மொழியைப் பற்றிய நம்பிக்கைகள் மனிதனின் அறிவுலக வளர்ச்சியின் அங்கமாக வளர்ந்து வந்திருக்கின்றன. மொழியின் தோற்றம், அதன் பரிணாம வளர்ச்சி, முதலாவது தோன்றிய மொழி என்னும் முதல்மொழிக் கருத்தாக்கம், மொழியமைப்புகளிடையே காணும் இனஉறவு என மொழி பற்றிய சிந்தனைகளில் இவை முக்கிய இடம்பெற்று வந்துள்ளன. இவற்றுள் மொழியின் தோற்றம், முத