“கவிதைக்குக் கவிதையாலேயே பதிலளியுங்கள்”
சல்மா ஆவணப் படத்திலிருந்து
நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்குத் தமிழ்நாட்டிலிருந்து காலியாக உள்ள ஆறு இடங்களுக்குத் திமுகவின் வேட்பாளர்களில் ஒருவராகக் கவிஞர் சல்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தங்களுடைய பதவிக்காலம் முடிவடைகின்ற திமுகவின் உறுப்பினர்கள் நான்குபேரில் ஒருவர் எம்.எம். அப்துல்லா. ஏற்கெனவே மாநிலங்களவையின் அதிமுக உறுப்பினராக இருந்த முகம்மது ஜான் என்பவர் மரணமடைந்துவிட்டதால் உண்டான காலியிடத்திற்குத்தான் திமுக சார்பில் எம்.எம். அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஜானின் பதவிக் காலம் எப்போது முடிவடைவதாக இருந்ததோ அந்த நாள்வரைக்கும்தான் அப்துல்லா பொறுப்பிலிருக்க முடியும். எனவே மீண்டும் அப்துல்லாவுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படலாமென்ற ஊகம் இருந்தது. இப்போது அப்துல்லாவுக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பளிக